சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்... அதிமுகவில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையாம்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் ஆட்சியை கலைக்க திமுக, அந்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கக்கூடும் என்று பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் உள்ள ஒருவரை கூட திமுக தலைவர் ஸ்டாலினால் விலைக்கு வாங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதேநேரம் திமுக கூட்டணியின் பலம் 110 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்பட சிலரை திமுக விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

mk stalin cannot buying Even single aiadmk mla , says minister jayakumar

இந்நிலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியார்கள் சில கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தஅமைச்சர் ஜெயக்குமார், வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயர்ந்துள்ளது என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்து காட்டியுள்ளது. அதிமுகவில் உள்ள ஒருவரை கூட, திமுக தலைவர் ஸ்டாலினால் விலைக்கு வாங்க முடியாது என்றார்.

சமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி சமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி

இந்தி திணிப்பு குறித்தகேள்விக்கு பதில் அளித்த அவர், மும்மொழி கொள்கை என்பது நெருப்பில் கைவைப்பது போல, யாரும் அதை ஏற்க முடியாது, இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு தற்காலிகமானது என்றும் உச்சநீதிமன்றம் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தமிழக அரசு உரிய பதிலளிக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

English summary
minister jayakumar said that dmk leader mk stalin cannot buying Even single aiadmk mla
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X