சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன் மீதான அவதூறு வழக்குகளுக்கு எதிராக முக ஸ்டாலின் வழக்கு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

மாநகராட்சி டெண்டர்கள் குறித்தும், மத்திய அரசின் தரவரிசை பட்டியலின் படி மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க பட்டது குறித்தும்,குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகவும் தமிழக அரசை விமர்சித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான செய்தி முரசொலி நாளிதழில் செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் செய்தி வெளியானது..

mk stalin challenge petition in madras high court over defamation case : HC notice to tn govt

அதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் தமிழக முதலமைச்சர் சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்..

இந்த வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி நேரில் ஆஜராகி ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி மு.க ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில், ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிக்கை வெளியிட்டதாகவும், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே தன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார்,மார்ச் 23-ம் தேதிக்குள் வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்..

English summary
dmk leader mk stalin challenge petition in madras high court over defamation case : high court reply notice to tamil nadu government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X