சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    சொன்னதையே சொன்ன ப. சிதம்பரம்.. குழம்பிய சிபிஐ- வீடியோ

    சென்னை: வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மத்திய அரசின் தலையீடு காரணமாவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    mk stalin condemned p chidambaram arrest by cbi in delhi

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , ப சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் சிபிஐ அதிகாரிகள் வீட்டின் சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது நாட்டிற்கே அவமானம் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது

    சுமார் 20 முறைக்கு மேல் சிபிஐ அதிகாரிகள் கூப்பிட்டபோதெல்லாம் ப சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கமளித்து இருக்கிறார். ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

    அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர். அவரது விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" இவ்வாறு கூறினார்

    English summary
    dmk leader mk stalin condemned central government over p chidambaram arrest by cbi in delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X