சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிதத்தன்மையற்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    நீலகிரி: யானையை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

    இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் பதிவு செய்துள்ளதாவது:

    காட்டில் வாழ்பவற்றை மிருகங்கள் என்கிறோம். ஆனால் நாட்டில் நடமாடுவோரே மிருகங்கள் என நினைக்கும் அளவுக்கு, நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    MK Stalin condemns Barbaric act on Elephant Attack in Nilgiris

    யானை என்பது ஒற்றை உயிரினமன்று; காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன்!

    அதன் அருமை அறியாது, மனிதத்தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin has condemned the Barbaric act on Elephant Attack in Nilgiris.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X