சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈழத் தமிழருக்கான அதிகாரப்பகிர்வுக்கு முன்னுரிமை இல்லை என்பதா? கோத்தபாயவுக்கு ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

MK Stalin condemns Gotabaya Rajapaksa on Eelam Tamil issue

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், "பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை" என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றைய "தி இந்து" ஆங்கில பத்திரிகையில் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. "இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன்" என்று கூறிய இலங்கை அதிபர், இந்திய பிரதமரைச் சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. பெற்றோரை அலைய விட்ட 3 போலீசார்.. அதிரடியாக சஸ்பெண்ட்!ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. பெற்றோரை அலைய விட்ட 3 போலீசார்.. அதிரடியாக சஸ்பெண்ட்!

பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது. பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
DMK President MK Stalin condemend that Srilanka President Gotabaya Rajapaksa's comments on Eelam Tamil issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X