சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட்: சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் கடிதத்தையா மதிக்க போகிறார்கள்?.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தையா மதிக்க போகிறார்கள் என திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது. தினந்தோறும் புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையும் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

Recommended Video

    NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிணையும் முதல்வர்கள்.. உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு

     நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துமாறு அரசுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் அழுத்தம்.. ரமேஷ் போக்ரியால் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துமாறு அரசுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் அழுத்தம்.. ரமேஷ் போக்ரியால்

    முதல்வர்

    முதல்வர்

    எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்றைய தினம் 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்கம்

    அப்போது நீட் தேர்வுகளை ஒத்திவைக்க ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுவை ஆகிய 7 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட்டை ரத்து செய்ய வேண்டும்.

    பிளஸ் 2 மதிப்பெண்

    பிளஸ் 2 மதிப்பெண்

    மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

    நீட் எதிர்ப்பு

    நீட் எதிர்ப்பு

    தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர். சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

    ஜேஇஇ தேர்வு

    ஜேஇஇ தேர்வு

    நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்! என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    DMK President MK Stalin says that Tamilnadu Government should file case against NEET with 7 States.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X