சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை விட்டுவிட வேண்டாம்... விசாரிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவதால், அவர்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

லாக்டவுன் காலத்தில் போலீஸார் காட்டிய கெடுபிடிகளை காட்டிலும் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் அந்த குழுவில் உள்ளவர்கள் போட்ட ஆட்டத்திற்கு அளவில்லை என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் புகார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஒப்புக்கு கணக்குக் காட்டி தப்பிவிட நினைக்கக்கூடாது என்றும் தந்தை மகன் கொலைக்கு காரணமான அனைவரும் ஒருவர் விடாமல் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு

தப்ப நினைக்காதீர்

தப்ப நினைக்காதீர்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது.

தொடர் அழுத்தம்

தொடர் அழுத்தம்

இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீரும், தென்மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டமும், மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தங்களும், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவுகளும், ஊடகங்கள் காட்டிய ஆதாரப்பூர்வமான காட்சிகளும், என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அ.தி.மு.க. அரசு சுற்றி வளைக்கப்பட்டது

ஒருங்கிணைந்த போராட்டம்

ஒருங்கிணைந்த போராட்டம்

பொது மக்களின் இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இல்லாமல் போயிருக்குமானால், 'செங்கல்லை விழுங்கிவிட்டுச் செரித்துவிட்டது' என்று சொல்லி இருப்பார் முதலமைச்சர். இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஶ்ரீதர், இரண்டு உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும், இரண்டு காவலர்களான முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பூசிமெழுக

பூசிமெழுக

பென்னிக்சும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, தமிழக முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர், இதனைப் பூசிமெழுகப் பிரயத்தனம் செய்தார். இது ‘லாக்அப் மரணமே அல்ல' என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன் பங்குக்கு மற்றொரு தீர்ப்பைச் சொன்னார்.

வீடியோ ஆதாரங்கள்

வீடியோ ஆதாரங்கள்

கடந்த நான்கு நாட்களாக ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. அநியாயத்தைத் தட்டிக் கேட்க, பொதுமக்களே ஆர்த்தெழுந்து, புலன் விசாரணையை மேற்கொண்டிருப்பதைப் போன்ற எண்ணம் பார்ப்பவர் மனதில் தோன்றியிருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையில் வேறு வழியில்லாமல் தான், இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக அரசு தள்ளப்பட்டது.

கடமை முடியவில்லை

கடமை முடியவில்லை

இத்தோடு கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வினையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகப் பெருமக்களும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை'ச் சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

English summary
mk stalin demands, friends of the police also should be investigated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X