சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் இக்கட்டான தருணத்தில் உள்ள போது சொத்துவரி வசூலிப்பதா... மு.க.ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துவரி வசூலை குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது மாநகராட்சி நிர்வாகம் தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இக்கட்டான தருணத்தில் "சொத்து வரி செலுத்துங்கள்" என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்ற செயல் என விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஒன்னும் சரியில்லை.. பெங்களூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. தினமும் ஆயிரத்திற்கு மேல் கேஸ்கள்ஒன்னும் சரியில்லை.. பெங்களூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. தினமும் ஆயிரத்திற்கு மேல் கேஸ்கள்

சொத்து வரி

சொத்து வரி

ஊரடங்கு நீடிக்கின்ற நிலையில், "நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும்" என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை.

மக்கள் தவிப்பு

மக்கள் தவிப்பு

வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை "இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ" என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் "சொத்து வரி செலுத்துங்கள்" என்று எச்சரிக்கை விடுவது மனித நேயமற்றது.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

ஊழல்களுக்கு - குறிப்பாக கொரோனா கால ஊழலுக்கு "புகலிடமாக"த் திகழும் சென்னை மாநகராட்சி- "கமிஷன் வசூல்" செய்வதற்கான டெண்டர்களை ரத்து செய்து நிதி நிலைமையைச் சரி செய்யலாம். ஆனால் அது போன்ற டெண்டர்களை அனுமதித்துக் கொண்டே- "வருவாய்" என்ற காரணம் காட்டி சொத்து வரியை உடனே செலுத்துங்கள் என்று சென்னை மாநகராட்சி கெடுபிடி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

ஆகவே சென்னை மாநகராட்சியின் "சொத்து வரி வசூல்" அறிவிப்பைத் திரும்பப் பெற்று- இந்த வரி வசூலைக் குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
mk stalin demands, property tax should be postponed for 6 months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X