சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு- ஸ்டாலின் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவின் சிறை காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5-ல் ரத்து செய்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

MK Stalin demands to release Farooq Abdullah

அம்மாநில முன்னாள் முதல்வரும் லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவின் மீது தேசதுரோக பேச்சுகள் உள்ளிட்டவைகளுக்காக பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. தற்போது பரூக் அப்துல்லாவின் சிறை காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக மரபுகள், அரசியல் சாசன விழுமியங்களை அவமதிக்கும் வகையில் பரூக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

82 வயதாகும் பரூக் அப்துல்லாவின் சிறை காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு உடனடியாக பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

English summary
DMK President MK Stalin has demanded that to release of Jammu Kashmir Former Chief Minister and Union Minister Farooq Abdullah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X