சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் "செஞ்சுரி".. டிவீட் போடு.. கொண்டாடு.. திமுக உற்சாகம்!

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தலைவராக 100 நாட்களை கடந்த ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: நாட்கள் பறப்பதே தெரியவில்லை.. மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று அதுக்குள்ள 100 நாள் ஆகிவிட்டது. இதை திமுக ட்வீட் போட்டு கொண்டாடி வருகிறது.

    ஒருமுறை கருணாநிதி, தனது சமுதாயப் பணிகளை ஸ்டாலின் தொடர்வார் என்று சொல்லி இருந்தார். உடனே இதை பற்றி செய்தியாளர்கள் கருணாநிதிடம் கருத்து கேட்டார்கள்.

    அதற்கு கருணாநிதி, "ஏன் ஸ்டாலின் வரக்கூடாதா? அவர் திமுக இல்லையா? வரக்கூடாது என்று இப்போதிருந்தே அதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவருக்கு வேண்டுமானால் கடுப்பு ஏற்படும். ஆனால் திமுக ஒரு ஜனநாயக இயக்கம்" என்றார். எப்போது கருணாநிதி இப்படி அன்பழகனை பக்கத்தில் வைத்து கொண்டு சொன்னாரோ அப்போதே ஓரளவுக்கு முடிவாகிவிட்டது ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று!!

    காவி வர்ண அரசியல்

    காவி வர்ண அரசியல்

    கருணாநிதி மகன் என்பதையும் தாண்டி கட்சியின் அடிமட்ட தொண்டனாக இணைந்து, படிப்படியாக உச்சத்தை தொட்டார் ஸ்டாலின். தலைவராக பதவி ஏற்கும்போது அவர் பேசிய பேச்சு பல திமுக தொண்டர்களுக்கு உத்வேகம் பாய்ச்சியது. பாஜகவின் காவி வர்ண அரசியலுக்கு பகிரங்க எதிர்ப்பு பிரகடனப்படுத்தப்பட்டது. ஸ்டாலினின் இந்த பேச்சை நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களுமே திரும்பி பார்த்தார்கள்.

    சிலை திறப்பு விழா

    சிலை திறப்பு விழா

    எப்படியோ... இதெல்லாம் நடந்து 100 நாள் ஆகிவிட்டது. இந்த 100 நாளில் ஸ்டாலின் நிர்வாகிகள் சந்திப்பு, தொண்டர்கள் சந்திப்பு, அறிக்கை போர், ட்விட்டர் கண்டனங்கள், உள்கட்சி விவகாரம், கூட்டணி பூசல், என்று கடைசியில் கருணாநிதி சிலை திறப்பு விழா வரை நகர்த்தி கொண்டு வந்து விட்டுவிட்டார்.

    கொளத்தூர்

    கொளத்தூர்

    இனியும் டெல்லிக்கு பறந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மாபெரும் அரசியல் மாற்றத்திற்கான ஆலோசனையிலும் ஈடுபட போகிறார். இவ்வளவு நடந்தும் தன் தொகுதியான கொளத்தூரை எட்டிப் பார்க்க ஸ்டாலின் தவறவில்லை... மறக்கவும் இல்லை...

    ட்வீட் போடு.. கொண்டாடு

    திமுக தலைவராக ஸ்டாலினின் இந்த 100 நாட்களை தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். தலைவராக நீடித்து இன்னும் பல மாற்றங்களை தமிழகத்தில் ஸ்டாலின் உருவாக்குவார் என்றாலும், இந்த 100 நாள் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதாக தொண்டர்கள் பூரித்து போய் சொல்கிறார்கள். இதனை இணையத்தில் ட்விட்களை போட்டு கொண்டாடியும் வருகிறார்கள்!!

    English summary
    MK Stalin enter to 100 days as DMK Chief. Volunteers celebrating this with exchange sweets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X