• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வாரிசு அரசியல்.. கண்ணாடி முன்நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட காமெடி போல் இருக்கு.. ஸ்டாலின் பதிலடி

|

சென்னை: வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா பேசுவது கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட காமெடி போல் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த இரு தினங்கள் பயணமாக நேற்று சென்னை வந்தார். டெல்லியிலிருந்து இரு தனி விமானத்தில் வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இரு புறமும் அதிமுக, பாஜக தொண்டர்கள் திரண்டு போய் வரவேற்றனர்.

அமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்!

தமிழ் மொழி

தமிழ் மொழி

இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் பேச என்னால் முடியவில்லை. எனக்கு தமிழ் தெரியாது.

கசானா

கசானா

இந்திாவில் வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக ஒழித்து வந்திருக்கிறது. அது போல் தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம் என்றார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை- உறவினர்களை- பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்துள்ளனர்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் - வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

தேர்தல்

தேர்தல்

அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி - தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப்பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
English summary
DMK President MK Stalin condemns Amit Shah for criticising heir politics in Tamilnadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X