• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஸ்டாலினுக்கு கஷ்டம்.. முருகேசனை அடித்தே கொன்ற போலீஸ்.. மாறாத காட்சிகள்.. சவுக்கை எடுப்பாரா முதல்வர்?

Google Oneindia Tamil News

சென்னை: சரியாக பென்னிக்ஸும் அவரது தந்தையும் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரு வருஷம் ஆகிறது.. அதே நாளில் இன்னொரு அப்பாவியை போலீஸார் தாக்கி உயிரிழக்க காரணமாகியுள்ளனர். நாளுக்கு நாள் முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ நல்ல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், முதல்வருக்கு தர்மசங்கடமான சூழல் ஒன்றை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது திமுகவை வருத்தமடையச் செய்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்படாததால், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு சென்று, மது பாட்டில்களை குடிமகன்கள் வாங்கி வருகின்றனர்..

அந்த வகையில் இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயியும், மதுவாங்க பாப்பநாய்க்கன்பட்டி என்ற ஊர் வழியாக சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.

 'ஒன்றிய அரசு'.. கருணாநிதி பாணியில்.. மோடி அரசுக்கு ஸ்டாலின் உணர்த்தும் பாடம்! 'ஒன்றிய அரசு'.. கருணாநிதி பாணியில்.. மோடி அரசுக்கு ஸ்டாலின் உணர்த்தும் பாடம்!

 முருகேசன்

முருகேசன்

அங்குள்ள செக்போஸ்ட்டில் டியூட்டி பார்த்து கொண்டிருந்த போலீசார் முருகேசனை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.. முருகேசன் தண்ணி அடித்து இருந்ததும் தெரியவந்தது.. இது தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக முற்றியது.. இறுதியில் லத்தியாலேயே போலீசார் முருகேசனை தாக்கி உள்ளார்.. இதனால் மண்டை பிளந்து முருகேசன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

 சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி பகீரை கிளப்பியது. வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, முருகேசனை லத்தியால் அடித்த சிறப்பு எஸ்ஐ பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகி பகீரை கிளப்பியது. வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, முருகேசனை லத்தியால் அடித்த சிறப்பு எஸ்ஐ பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் - ஜெயராஜ் இறந்து ஒரு வருடம் ஆகிறது.. அந்த அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை.. அது சம்பந்தமான கேஸ் விசாரணையும் முழுமையாக முடியவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் காவல்துறையினரால் ஏற்பட்டுள்ளதை மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. பென்னிக்ஸ் - ஜெயராஜ் விவகாரமும் இப்படித்தான், கொலை செய்யும் அளவுக்கு பென்னிக்ஸ் - ஜெயராஜ் எந்த தவறுமே செய்யவில்லை.. ஆனாலும் மிக கொடுமையான முறையில் லத்தியால் அடித்தே கொன்றனர்.

 உடம்பு சரியில்லை

உடம்பு சரியில்லை

இந்த விவகாரம் வெளிவந்தபோது, பென்னிக்ஸ், அவரது அப்பா ரெண்டு பேருக்குமே உடம்பு சரியில்லை, அதனால்தான் இறந்துவிட்டனர் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கூறியிருந்தார்.. ஆனால், மதுரை ஹைகோர்ட் மட்டும் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால், "லாக்அப் டெத்" என்ற விஷயமே வெளியே தெரியாமல் போயிருந்திருக்கும்.

 முருகேசன்

முருகேசன்

இப்போதும் அப்படியேதான் நடந்துள்ளது.. விவசாயி முருகேசன் எந்தவித மாபெரும் தவறையும் செய்யவில்லை.. யாரையும் கற்பழிக்கவில்லை.. யாரையும் கத்தியால் குத்தி கொல்லவுமில்லை.. யார் பொருளையும் திருடவும் இல்லை.. மற்றவர்களைபோலவே, மது அருந்திவிட்டு ரோட்டில் வந்துள்ளார்.. இதற்கு போய் எதற்காக வாக்குவாதம் வந்திருக்க வேண்டும்? எதற்காக லத்தியால் அடித்து கொல்லும்வரை சென்றிருக்க வேண்டும்? என்ற அதிர்ச்சி கேள்விகள் நம்மிடம் எழுகின்றன.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

பொதுவாக முதல்வர்கள் கையில்தான காவல்துறை இருக்கும்.. ஜெயலலிதா எந்த காரணம்கொண்டும் போலீஸ் துறையை வேறு யாருக்கும் தந்துவிட மாட்டார்.. தன் கையிலேயே வைத்திருந்து சலுகைகளாக அள்ளி தருவார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி காலத்தில் போலீசாரின் அராஜாகம் எல்லை மீறியது.. இப்போது திமுக அரசு வந்த பிறகும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

 கிடுக்கிப்பிடி

கிடுக்கிப்பிடி

இந்த விஷயத்தில் திமுக ஆரம்பத்திலிருந்தே கிடுக்கிப்பிடியாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. காரணம், மக்களுக்கான பல நல்ல அறிவிப்புகளை அது தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த நேரத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்தால் அது ஆட்சிக்கு கெட்ட பெயராகவே அமையும். நிச்சயம் ஸ்டாலினுக்கு அவப்பெயர் வந்து சேர்ந்துவிடும்.. உடனடியாக காவல்துறையினருக்கு கட்டுப்பாடுகளையும், நெறிகளையும் வகுக்க வேண்டும்..

ஸ்டாலின்

ஸ்டாலின்

லத்தியால் இப்படி மாட்டைப் போட்டு அடிப்பது போல நடு ரோட்டில் வைத்துத் தாக்கும் அளவுக்கு முருகேசன் என்ன தவறு செய்தார் என்பதையும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இல்லையானால், தினம் தினம் நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வரும் நிலையில், இதுபோன்ற ஒருசில காரியங்களால் ஒட்டுமொத்த அரசுக்கும் கெட்ட பெயர் வந்துவிடும்.. இதற்காகவே எதிர்க்கட்சிகளும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு காத்து கொண்டுள்ளனர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை..!

English summary
MK Stalin gov should put an end to lock-up deaths in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X