சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விக்ரம் லேண்டர் சிதைவுகள் கண்டுபிடிப்பு- சண்முக சுப்பிரமணியனுக்கு மு.க.ஸ்டாலின், தினகரன் பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிதைவுகளை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாசா அனுப்பிய விக்ரம் லேண்டர் தொடர்பான படங்களை மட்டுமே வைத்து அது எங்கு சிதைந்திருக்கலாம் என கண்டறிந்தவர் சண்முக சுப்பிரமணியன். அவரது பரிந்துரைப்படி ஆய்வை நடத்திய நாசா, விக்ரம் லேண்டரின் சிதைவுகளை உறுதிப்படுத்தியது.

MK Stalin greets Shanmuga Subramanian

இதனால் ஒட்டுமொத்த உலகமும் சண்முக சுப்பிரமணியனை பாராட்டி வருகிறது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சண்முக சுப்பிரமணியன் எதிர்காலம் சிறக்கட்டும் என கூறியுள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளரான மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். இதற்காக அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அவரைப் பாராட்டி இருப்பது பெருமிதம் தருகிறது.

நாசாவிற்கு மெயில் செய்தேன்.. பதில் அனுப்பினார்கள்.. எல்லாம் மாறியது.. சண்முக சுப்ரமணியன் விளக்கம்! நாசாவிற்கு மெயில் செய்தேன்.. பதில் அனுப்பினார்கள்.. எல்லாம் மாறியது.. சண்முக சுப்ரமணியன் விளக்கம்!

தமிழக விஞ்ஞானிகளின் சிறப்பான பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திராயன் 2, நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK President MK Stalin greets Shanmuga Subramanian who help to NASA to find the Vikram Lander.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X