சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதியை மிஞ்சிய ராஜதந்திரம்... பேரணியை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    வைரலாகும் DMK தாத்தா ! #TNopposeCAA

    சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக நடத்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் ஸ்டாலின்.

    அரசியலில் கருணாநிதிக்கு இணையாக மதிநுட்பத்துடனும், ராஜதந்திரத்துடனும் யாராலும் காய்களை நகர்த்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில் அவரிடம் கற்ற ராஜதந்திரத்தை ஸ்டாலின் இப்போது பயன்படுத்தியுள்ளார்.

    பேரணிக்கு தடைகோரி வாராஹி என்பவர் தொடர்ந்த வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் யாரையும் ஆஜராக்காமலேயே அதில் வெற்றி கண்டு நினைத்ததை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின்.

    சென்னை பேரணி மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் -வைகோ சென்னை பேரணி மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் -வைகோ

    ஐகோர்ட்டில் வழக்கு

    ஐகோர்ட்டில் வழக்கு

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக இன்று பேரணி நடத்தியுள்ள நிலையில், அதற்கு தடைகோரி வாராஹி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மாலை அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால் திமுக பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    இந்நிலையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதிதரவில்லை என தெரிவிக்கப்பட்டதுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    ஜனநாயக நாடு

    ஜனநாயக நாடு

    அதைக் கேட்ட நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் போராட சட்டம் அனுமதி அளிப்பதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தொடர்ந்த வழக்கு திமுகவுக்கு சாதகமானதை எண்ணி ஆளுங்கட்சி படு அப்செட்டாம். பேரணிக்கு நீதிமன்றம் தடைவிதிக்கும் என எண்ணிய நிலையில் உரிய பாதுகாப்பு கொடுக்கக் கூறியது அவர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்ததாம்.

    ஆஜராகவில்லை

    ஆஜராகவில்லை

    பேரணிக்கு தடைகோரி வாராஹி தொடர்ந்த வழக்கில் திமுகவை எதிர்மனுதாரராக சேர்க்க அவர் தவறியதால், நீதிமன்றத்தில் இருந்து திமுகவுக்கு எந்த அழைப்பாணையும் செல்லவில்லை. இதனால் திமுக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகத் தேவையில்லாத சூழல் ஏற்பட்டது.

    கூல் ஸ்டாலின்

    கூல் ஸ்டாலின்

    முக்கியமான வழக்கில் திமுக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் இருந்தது ஆளுந்தரப்புக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக சட்டத்துறையில் உள்ள முக்கிய நபர் ஒருவருடன் விவாதித்த ஸ்டாலின், அவர் கொடுத்த ஐடியாபடி செயல்பட்டுள்ளார். அதன்படி திமுக வழக்கறிஞர்களை ஆஜராக்காமலேயே போலீஸ் பாதுகாப்பை பெற்று பேரணியை நடத்தி முடித்துள்ளது திமுக.

    English summary
    mk Stalin has a diplomacy beyond the scope of Karunanidhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X