Just In
மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்.. நெகிழ்ந்த செல்வராஜ்!

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்- வீடியோ
சென்னை: விபத்தில் காலை இழந்த தனக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாற்றுத்திறனாளி செல்வராஜ்.
சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ரயில்வேயில் ஓய்வுபெற்ற ஊழியர் செல்வராஜ் விபத்தில் சிக்கினார்.

அவ்வழியாக வந்த மு க ஸ்டாலின் செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
விபத்தில் வலது காலை இழந்த செல்வராஜுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று செயற்கைக் கால் வழங்கினார். மாற்றுத்திறனாளியான தன்னை நடக்க வைத்த ஸ்டாலின்க்கு செல்வராஜ் நன்றி தெரிவித்தார்.