சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவாலயத்தில் முளைத்த பிரமாண்ட கொடி கம்பம்.. கொடி ஏற்றினார் ஸ்டாலின் !

பிரம்மாண்ட திமுக கொடியை ஏற்றி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா அறிவாலயத்தில் முளைத்த பிரமாண்ட கொடி கம்பம்-வீடியோ

    சென்னை: இந்தியாவிலேயே எந்த கட்சிக்குமே இல்லாத மிக உயரமான கொடி கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து சல்யூட் அடித்தார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்!!

    இந்தியாவிலேயே எந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு அதிக உயர கொடி கம்பம் வைக்க திமுக முடிவு செய்தது. இந்த கொடிக்கம்பத்தை நிறுவ முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன்தான் இதற்கான ஏற்பாட்டை கவனித்து கொண்டார்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் 320 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பத்தை செய்த அதே நிறுவனத்திடம், 114 அடி உயர திமுக கொடி கம்பத்தை செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    அதன்படியே 2 ஆயிரத்து 430 கிலோ எடை இரும்பினால் இந்த கொடி கம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 760 மி.மீ. விட்டம் கொண்டது. இந்த கொடி கம்பம் ரூ. 14 லட்சம் செலவில் தயார் ஆகி உள்ளது. இதன் மொத்த எடையோ 2,430 கிலோ கொண்டது.இந்த பிரமாண்ட கொடி கம்பத்தை அண்ணா அறிவாலயத்தில் நட முடிவானது.

    பாதிப்பு ஏற்படாது

    பாதிப்பு ஏற்படாது

    திமுக கொடி மட்டும் 30 அடி நீளம் 20 அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. இது புனேவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாம். வெயிலோ, மழையோ, காற்றோ என எது வந்தாலும் இந்த கொடிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

    கொடி ஏற்றப்பட்டது

    கொடி ஏற்றப்பட்டது

    இரவு நேரத்தில் கூட எரியும் வண்ணம், இந்த கொடி கம்பத்தில் ‘ஹைபீம்' லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கொடியை இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார் மோட்டார் மூலம்தான் இந்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது கருப்பு-சிவப்பு கலர் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

    கலர்ஃபுல் பலூன்

    கலர்ஃபுல் பலூன்

    கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடல் இசைக்கப்பட்டது. ஒருபுறம் செம்மொழி பாடல், மறுபுறம் கலர்ஃபுல் பலூன்கள் பறக்க, திமுக கொடி கம்பத்தில் ஏறியது.

    சல்யூட்

    சல்யூட்

    இந்த கொடி உச்சியை அடைய 12 நிமிஷங்கள் ஆனது. அதுவரை பேன்ட்-வாத்திய முழக்கங்கள் நிறுத்தப்படவே இல்லை. கொடி ஏற்றியதும் மு.க.ஸ்டாலின் சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.

    English summary
    MK Stalin hoists 114 feet hight Huge DMK Flag at Anna Arivalayam and Salute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X