சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக தலைவராக பொறுப்பேற்று சந்தித்த முதல் தேர்தல்.. கருணாநிதி இல்லாத நிலையிலும் ஸ்டாலின் சாதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    கனிமொழியின் 3 ஆண்டுகளாக செய்த களப்பணி கை கொடுத்திருக்கிறது

    சென்னை: கருணாநிதி இல்லாத நிலையிலும் திமுக தலைவர் ஸ்டாலின் லோக்சபா தேர்தலில் அசத்தி காட்டிவிட்டார்.

    கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதிலிருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார். அந்த சமயத்தில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் படுதோல்வியை தழுவியது.

    ஜெயலலிதா இல்லாத நிலையில் அவரது தொகுதியை பிடிக்க தீவிரம் காட்டி வந்த நிலையில் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே! என்னதான் சொல்லுங்க.. அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான்.. அசத்திட்டாங்களே!

    திமுக தலைவரான ஸ்டாலின்

    திமுக தலைவரான ஸ்டாலின்

    இந்த நிலையில் கருணாநிதி கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து திமுக தலைவராக முதல் முறையாக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் தனது ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனத்துடன் எடுத்து வைத்து வருகிறார்.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    இந்த நிலையில் திமுக தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக லோக்சபா தேர்தலையும் சட்டசபை இடைத்தேர்தலையும் அவர் சந்தித்தார். இதில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போதும் மிகவும் கவனத்துடன் இருந்தார்.

    தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக

    விளைவு

    விளைவு

    நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் 38 தொகுதிகளில் திமுக 35 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இது பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    சாதித்த ஸ்டாலின்

    சாதித்த ஸ்டாலின்

    கருணாநிதி இல்லாத போதிலும் திமுக தலைவராக கட்சியை வழிநடத்தி வரும் ஸ்டாலின் அபார சாதனை செய்துள்ளார். இதன் மூலம் திமுக நாடாளுமன்றத்தில் 5-ஆவது மிகப் பெரிய கட்சியாக திகழ்கிறது. எதிர்க்கட்சிகள் சொல்வதை போல் ஸ்டாலின் நாடாளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல் என்ற இரு குதிரைகளில் கவனம் செலுத்தி சவாரி செய்தார்.

    செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்! செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

    வெற்றி அறுவடை

    வெற்றி அறுவடை

    கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை என எச்சரிக்கை விடுத்து எழுதியிருந்தார். அதன்படி தற்போது அவர் வெற்றியை அறுவடை செய்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் விமர்சனம், முக அழகிரியின் சவால்கள் இவற்றையெல்லாம் கடந்த சாதனை நாயகனாக திகழ்கிறார் ஸ்டாலின்.

    English summary
    DMK President MK Stalin made an achievement even after Karunanidhi's demise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X