சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெங்குவை தடுக்காமல் பேனருக்காக நீதிமன்றம் ஓடுகிறது அரசு.. ஸ்டாலின் கடும் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

பட்ஜெட்டில் ரூ.6000 எதற்கு?... ஓட்டுக்கு தானே... ஸ்டாலின் விளாசல் பட்ஜெட்டில் ரூ.6000 எதற்கு?... ஓட்டுக்கு தானே... ஸ்டாலின் விளாசல்

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து நேரடியாக சந்தித்தேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூடிமறைக்கிறது

மூடிமறைக்கிறது

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் மட்டும் ஆண்கள் 17 பேரும், பெண்கள் 14 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூட தெரியப்படுத்தாமல் இதனை மூடி மறைத்து மர்மக் காய்ச்சல் என பொய் பிரசாரம் செய்கிறது அதிமுக அரசு.

ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின் கண்டனம்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய விஜயபாஸ்கரோ டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை குறித்து கவலையுறாமல் கொ.மு., கொ.பி என கேளிக்கையாக பேசியிருப்பது கண்டனத்திற்குரிய மற்றும் வருந்தத்தக்கது

போர்க்கால அடிப்படையில்

போர்க்கால அடிப்படையில்

போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்களும் டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பேனருக்காக போனீங்களே

பேனருக்காக போனீங்களே

பேனர் வைப்பதற்காக நீதிமன்றம் சென்ற எடப்பாடி அரசால் ஏன் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்".

English summary
mk stalin met dengue patients in chennai rajiv gandhi government hospital, he attacks tn govt over banner issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X