சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேக்கற எங்களுக்கே கஷ்டமா இருக்கே, சொல்ற உங்களுக்கு.. ஸ்டாலினை தாக்கிய தமிழக பாஜக டுவிட்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது வெட்கமாக இருக்கிறது என முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் 1976ம் ஆண்டு மிசா சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டார் என்பதற்கான ஆதாரத்தை கேட்டு பாஜக, உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

mk stalin misa arrest controversy: tamil nadu bjp twitter page attacks against mk stalin

இந்நிலையில் அண்மையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும் வேறு காரணத்தால் கைது செய்யப்பட்டதாகவும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.

mk stalin misa arrest controversy: tamil nadu bjp twitter page attacks against mk stalin

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக டுவிட்டர் பக்கத்தில் "அட அதே தாங்க நாங்களும் சொல்றோம்" என்றும் குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலினை டேக் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், "கேக்கற எங்களுக்கே கஷ்டமா இருக்கே, சொல்ற உங்களுக்கு எப்படி இருக்கும். அப்படியே அந்த காவல்துறை ஆதாரம் மட்டும் கொடுத்தீங்கன்னா...." என்று குறிப்பிப்பட்டுள்ளது.

English summary
tamil nadu bjp twitter page attacks against mk stalin misa arrest controversy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X