சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியுடன் முதல் ஆலோசனை கூட்டம்.. காணொலி காட்சியில் ஸ்டாலின் பங்கேற்பு.. கொரோனா பரவலை தடுக்க வியூகம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கொரோனா கட்டுப்பாடு நிலவரம் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், கோவை மாவட்ட ஆட்சியர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பிரதமருடன்ஆலோசனை நடத்தினர்.

MK Stalin participating in a meeting with prime minister Narendra Modi

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 9 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழக முதல்வர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவை அதிகரிக்க வேண்டும், தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை ஸ்டாலின் அப்போது முன்வைத்தார்.

திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!திருந்தவே திருந்தாத சென்னை.. கூட்டம் கூட்டமாக சுற்றிய மக்கள்.. பிடித்து அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்!

தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தால் நோய் பரவலை குறைக்கலாம் என்று பிரதமர் அப்போது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்கள் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Tamil Nadu chief minister MK Stalin was participated in the meeting with prime minister Narendra Modi containing coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X