• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஸ்ட்ரிக்ட்" ஸ்டாலின்.. லிஸ்ட்டில் "மாஜிக்கள்".. முதல் நபரே இவர்தான்.. உளவுதுறைக்கு பறந்த ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அந்த வகையில்தான் சில மாஜி அமைச்சர்களுக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோதே, யாரெல்லாம் ஊழல் புரிந்தார்களோ அந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி கொண்டே இருந்தார்..

அமைச்சர்கள் மட்டுமில்லை, அவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும், திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விடுத்து தெரியப்படுத்தி இருந்தார்.

பேச்சு

பேச்சு

இதில் ஹைலைட்டே வேலுமணிதான்.. அன்று பிரச்சாரம் செய்ய போன ஸ்டாலின், "கோவையிலுள்ள 21 தொகுதிகளையும் நான் பார்த்துக்கிறேன்னு வேலுமணி சொல்றார்.. ஆனால் நாங்க, அவரை அவர் தொகுதியை விட்டு நகரமுடியாத அளவுக்கு செய்துள்ளோம்... இது தான்டா திமுக.. மிஸ்டர் வேலுமணி, திமுகனா இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்" என்றார்.

உதயகுமார்

உதயகுமார்

இப்படியேதான் உதயகுமார் குறித்தும் பேசினார்.. இப்படியேதான் ராஜேந்திர பாலாஜிக்கும் சவால் விடுத்திருந்தார்... அந்த வகையில், அதற்கான நடவடிக்கைகளை திமுக தரப்பு தொடங்கிவிட்டதாக தெரிகிறது.. வரப்போகும் எம்பி தேர்தலில் திமுகவின் அபார வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமிதான் பெரிதும் காரணமாக இருப்பார் என்பதால், அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சியை திமுக மேலிடம் கையில் எடுத்துள்ளது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

மேலும், அவருக்கு ஆதரவாக உள்ள பல அமைச்சர்களுக்கும் செக் வைக்கும் அஸ்த்திரத்தையும் மேற்கொள்ள உள்ளது.. அந்த வகையில் லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது வேலுமணிதானாம்.. காரணம், வேலுமணியை முடக்கினால் மட்டுமே கொங்கு மண்டலத்தில் திமுக தலைதூக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான், மேற்கு மண்டல ஐஜியாக "ஸ்ட்டிரிக்ட்" சுதாகரை நியமித்திருக்கிறார்கள்.

ஐஜி-க்கள்

ஐஜி-க்கள்

அன்னைக்கு சட்டசபையில் இருந்து ஸ்டாலினை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிட்டு வந்தாங்களே, அது இந்த சுதாகர் டீம்தான்.. ஆனாலும் அதையெல்லாம் மறந்து, நேர்மையாக செயல்படும் காரணத்தினாலேயே இவருக்கு ஐஜி பதவிஉயர்வு வந்துள்ளது.. இனி இவருடைய வேலையே வேலுமணியை கண்காணிப்பதுதானாம்.. இதுபோலவே, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு ஐஜியை பார்த்து பார்த்து நியமனம் செய்துள்ளது திமுக தலைமை.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அதில் திருச்சி மண்டலமும் அடக்கம்.. அப்படியென்றால் விஜயபாஸ்கரும்தான் இந்த லிஸ்ட்டில் உள்ளார்.. என்னதான் மெடிக்கல் டீமில் உறுப்பினராக விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டாலும், ஊழல் விவகாரங்களை தனியாக நோண்டி எடுத்து வருகிறார்கள்.. அடுத்ததாக ஆர்.பி. உதயகுமார்..அடுத்ததாக ராஜேந்திர பாலாஜி.. என லிஸ்ட் நீளுகிறது.

30 டீம்கள்

30 டீம்கள்

இவர்களை கண்காணிக்கவும், சொத்துக்களை கணக்கிடவும், பினாமிகள் யார் என்று கண்டறியவும், 30 டீம்கள் ஏற்கனவே களமிறங்கி உள்ளன.. மற்றொரு பக்கம் உளவுத்துறையும் இறங்கி உள்ளது.. இவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம், முன்னாள்களின் சொத்து விவரங்களை கணக்கிட முனைப்பு காட்டி வருகிறார்கள்.. இறுதியில், மொத்த லிஸ்ட்டும் ஸ்டாலின் கைக்கு போனதுமே, அடுத்த ஆபரேஷன் ரெடியாகும் என்கிறார்கள்.. பார்ப்போம்!

English summary
MK Stalin prepares to take action against corrupt Ex Ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X