சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த அநீதி... என்னை தூங்கவிடவில்லை... மு.க.ஸ்டாலின் உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, தன்னைத் தூங்கவிடவில்லை என்றும் இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும், சோகமும் அநீதியும், வார்த்தைகளால் அடக்க முடியாதவை எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது;

சாத்தான்குளம்: போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் திமுக நிதி உதவிசாத்தான்குளம்: போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் திமுக நிதி உதவி

மீளாச்சோகம்

வணக்கம். ஜெயராஜ், பென்னிக்ஸ் இந்த இரு பெயர்களை, கடந்த சில நாட்களில் யாரும் மறந்திருக்க முடியாது. காவல்துறையினரின் வன்முறையால், அராஜகத்தால், இந்த இருவரை, நாம் இழந்து நிற்கிறோம். கடந்த இரு தினங்களாக இந்தச் சம்பவம் குறித்து வரும் செய்திகளை, புகைப்படங்களை, உறவினர்கள் கூறும் நிகழ்வுகளை, நண்பர்கள் பகிரும் சோகங்களைக் காணும்போது மனம் ஏற்க மறுக்கிறது; மீளாச் சோகமும், தீராத் துயரமும், சூழ்ந்து கொண்டிருக்கிறது.

மிருகத்தனமான செயல்

மிருகத்தனமான செயல்

இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, என்னைத் தூங்கவிடவில்லை! இவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும், சோகமும் அநீதியும், வார்த்தைகளால் அடக்க முடியாதவை. இந்தச் சம்பவத்தைப் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும், தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொடூரத்தின் உச்சமாக, ஆசனவாயில் லத்தியைக் கொண்டு தாக்குதல், நெஞ்சின் மீது ஏறி நின்று மிதித்தல் என்று கேள்விப்படும் ஒவ்வொரு செய்தியும், மனதை உலுக்குகிறது. இந்த மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான செயல்கள், பேரதிர்ச்சி அளிக்கிறது.

ரூ.25 லட்சம் நிதி உதவி

ரூ.25 லட்சம் நிதி உதவி

தன் கடையை ஊரடங்கு நேரத்தில் மூடுவதற்குத் தாமதம் ஆக்கினார்கள் என்ற காரணத்திற்காக இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்த காவல்துறையினருக்கு யார் அனுமதி தந்தது? ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இன்னுயிருக்கு எந்த நிவாரணமும் ஈடு இல்லை. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்திலுள்ள 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க, தி.மு.க. சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளோம்.

முதலமைச்சர் பொறுப்பு

முதலமைச்சர் பொறுப்பு

இந்த வழக்கின் விசாரணையை வேகமாகவும், தீவிரமாகவும், நேர்த்தியாகவும், நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க, சட்ட ரீதியாகவும் தி.மு.க. துணை நிற்கும். திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இவ்வாறு தனது வீடியோவில் பேசியிருக்கிறார். இதனிடையே திமுக அறிவித்த ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்.பி.வழங்கினார்.

English summary
mk stalin released his emotional video about sathankulam son and father death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X