சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதீர்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Google Oneindia Tamil News

சென்னை: புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் (2020)-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல் மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிக்கு துணை நின்றிட வேண்டும் என 12 மாநில முதலமைச்சர்களுக்கும் அவர் தனிக்கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இதனிடையே பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

ராஜஸ்தானில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில்..வரலாறு காணாத சாதனை.. தமிழகமும் ஒரு காலத்தில் வெளுத்திருக்குராஜஸ்தானில் 122 டிகிரி பாரன்ஹீட் வெயில்..வரலாறு காணாத சாதனை.. தமிழகமும் ஒரு காலத்தில் வெளுத்திருக்கு

வணக்கம்

வணக்கம்

நமது விவசாயிகள் கடந்து வந்த பாதை இலகுவானதாக இல்லை - பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அத்தகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் "மின் கட்டணக் குறைப்பு" மற்றும் "இலவச மின்சாரம்" ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் கோயமுத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.

இலவச மின்சாரம்

இலவச மின்சாரம்

விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து- 1989ல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று வாக்குறுதியை கலைஞர் அளித்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து - மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து- செயல்படுத்தினார்.

மின் திருத்தச் சட்டம்

மின் திருத்தச் சட்டம்

அத்திட்டம் 1990-லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் இலட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது.

அதிகார மீறல்

அதிகார மீறல்

மேலும், நமது அரசியல் சட்டப்படி "மின்சாரம்" பொதுப்பட்டியலில் (Entry 38) இருக்கிறது. "மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம்" மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. இந்நிலையில் புதிதாக "2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டம்" கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் 246வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தையும் - மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் (Concurrent List) பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக உள்ளது.

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தில் உள்ள கீழ்கண்ட அம்சங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  • மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
  • மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் "தேர்வுக் குழுவே" தேர்வு செய்வது.
  • 5 பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது. அது கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு - மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி (Alphabetical) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது.
  • மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க உத்தரவிடும் மத்திய அரசுக்கான அதிகாரம்.
  • "மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல்" உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் "மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்" (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் - மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது.
  • மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.
கைவிடுக

கைவிடுக

எனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் "புதிய மின்சார திருத்தச் சட்டம்" 2020-ஐ திரும்ப பெற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

12 முதலமைச்சர்களுக்கு

12 முதலமைச்சர்களுக்கு

இதேபோல் கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, டெல்லி ஆகிய 12 மாநில முதல்வர்களுக்கு கழகத் தலைவர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும்" பாதுகாத்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிக்கு தாங்கள் துணை நின்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
mk stalin's letter to 12 state chief ministers, and prime minister modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X