சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்... இதில்தான் அரசு முதலிடம்... போட்டு தாக்கும் மு.க.ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு குறித்து நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைப் பொய் என்று முதல்வர் கூறி இருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி இன்றைக்கும் என்றைக்கும் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் அவர்களது கொள்கை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வீட்டிற்கு வாங்கக் கூடிய எந்தப் பொருளாக இருந்தாலும் சிந்திக்கின்ற மக்கள், தி.மு.க. ஆட்சியில் இருந்தால் தான், இந்த நாடு சிறப்பாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலீடுகளை ஈர்க்க வழி இல்லாத அதிமுக அரசுக்கு... முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா..? -ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வழி இல்லாத அதிமுக அரசுக்கு... முழுப்பக்க விளம்பரம் ஒரு கேடா..? -ஸ்டாலின்

தடை கிடையாது

தடை கிடையாது

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- இதனை கிராம சபைக் கூட்டம் என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் எடப்பாடிக்கு கோபம் வந்துவிடும். அவர் அதற்குத் தடை போட்டிருக்கிறார். என்ன தடை போட்டாலும், அந்த தடையைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லுகிறீர்கள் அல்லவா, நாங்கள் ‘மக்கள் கிராம சபை கூட்டத்தை' நடத்துகிறோம் என்று சொல்லி நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தாய்மார்கள் அதரவு

தாய்மார்கள் அதரவு

கடந்த 23-ஆம் தேதியிலிருந்து நாம் இந்த கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே பார்க்கிறேன், இந்தக் கூட்டத்தை இதே கிராம சபைக் கூட்டமா? இது என்ன கிராம சபையின் மாநாடா? என்று வியக்கத்தக்க வகையில் ஆயிரக்கணக்கில் இங்கே திரண்டு இருக்கிறீர்கள். இங்குக் கூடி இருப்பதெல்லாம் ஆச்சரியமல்ல; இங்கு இருப்பவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள், தாய்மார்கள் தான் இங்குத் திரண்டு இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் சுற்றி நிற்கிறீர்கள். ஆண்கள் எப்பொழுதும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

முதல்வர் உத்தரவு

முதல்வர் உத்தரவு

இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தத் தொடங்கிய உடன் மக்கள் திரளக் கூடிய இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து, அதுவும் பெண்கள் அதிகமாக வந்து உட்கார்ந்து, அவர்கள் சில கேள்விகளைக் கேட்க, இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய குற்றங்களை, ஊழல்களை இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கக்கூடிய சூழ்நிலைகளை எல்லாம் இந்த மக்கள் சொல்லக்கூடிய காட்சிகளை, தொலைக்காட்சியில், ஆட்சியில் இருக்கக்கூடியவர்களும், அமைச்சர்களும் முதலமைச்சரும் பார்க்கிறார்கள்.இதை எப்படியாவது தடுக்க வேண்டும், இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஒரு உத்தரவு வந்தது.

மாற்றி விட்டோம்

மாற்றி விட்டோம்

கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தடை வாங்கிவிடலாம். அவர்கள் போட்ட உத்தரவை ரத்து செய்ய முடியும் என்று யோசனை சொன்னார்கள். இந்தப் பிரச்சனை எல்லாம் வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்? மக்கள் கிராமசபை என்ற பெயரில் நடத்துவோம் என்று முடிவு செய்து - ஏனென்றால் மக்கள் தானே திரளுகிறார்கள் - எனவே மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நாம் நடத்துவோம் என்று சொன்னேன்.

கொலையில்தான் முதலிடம்

கொலையில்தான் முதலிடம்

இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று ஒரு விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமான பொய். ஒரு தவறான கணக்கு. ஏதோ ஒரு தனியார் நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து வெளியிட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் பெற்ற வளர்ச்சியையும் சேர்த்தே கணக்கில் எடுத்து அவர்கள் அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்கள்.ஆனால் அவர்களது ஆட்சி இன்றைக்கும் என்றைக்கும் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் அவர்களது கொள்கை, இதில் தான் முதல் இடத்தில் இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சி

ஜெயலலிதா ஆட்சி

இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று முடிவு செய்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார்கள்.நமக்கும் அவர்களுக்கும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே 1% தான் வித்தியாசம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். அவர்கள் எந்த நேரத்தில் ஆட்சி கவிழும் நிலையில் உட்கார்ந்திருந்தார்கள்.

இட்லி சாப்பிட்டார்

இட்லி சாப்பிட்டார்

அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த அம்மையாருக்கு என்ன உடல்நிலை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் காலையில் ஒரு அமைச்சர் சொல்வார், அம்மா இட்லி சாப்பிட்டார், மாலையில் இன்னொருவர் சொல்வார், இட்லியோடு சட்னி சாப்பிட்டார். மறுநாள் இன்னொரு மந்திரி சொல்வார், அம்மா டிவி பார்த்தார்கள். அடுத்த நாள் இன்னொரு அமைச்சர் சொல்வார், அம்மா அரசு அதிகாரிகளுக்கு கையெழுத்துப் போட்டார்கள். அம்மா அதிகாரிகளுடன் கலந்து பேசினார்கள்.

மிகவும் துக்கம்தான்

மிகவும் துக்கம்தான்

இப்படி மாறி மாறி அறிக்கை கொடுத்தார்களே தவிர, என்ன உடம்பு, என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று சொல்லவில்லை. ஒரு நாள் திடீரென்று அந்த அம்மையார் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. உள்ளபடியே அதிர்ச்சிகரமான செய்திதான். என்ன தான் நமக்கு அரசியலில் எதிரியாக இருந்தாலும், நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மறைவு என்பது ஒரு துக்க கரமான நிகழ்வது தான்.

நமக்கு அதிர்ச்சி

நமக்கு அதிர்ச்சி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவர் எப்படி இறந்தார் என்பதே இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. தயவு செய்து பெண்கள் சிந்தித்துப்பாருங்கள். மறந்திருக்க மாட்டீர்கள். சாதாரணமான ஒருவர் இறந்தால் கூட உண்மை வெளியே வரும். ஆனால் இந்த மாநிலத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர் எப்படி இறந்தார் என்ற செய்தி வரவில்லை. தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.

மர்மம் இருக்கிறது

மர்மம் இருக்கிறது

அப்போது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். திடீரென்று ஒருநாள் அவரை தூக்கி விட்டு சசிகலா தான் முதலமைச்சராகப் போகிறார் என்று அறிவித்தார்கள். உடனே பன்னீர்செல்வத்திற்கு கோவம் வந்துவிட்டது. கோபம் வந்து என்ன செய்தார்? நேராக ஜெயலலிதா அம்மையாரின் சமாதிக்கு சென்று உட்கார்ந்து தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது. நான் நீதி கேட்கப் போகிறேன் என்று சொன்னார். அதாவது ஜெயலலிதா இறந்து ஒரு சில மாதங்கள் வாயைத் திறக்கவில்லை. முதலமைச்சர் பதவியைப் பறித்த உடனே அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பேசுகிறார்கள்.

ஏன் போகவில்லை

ஏன் போகவில்லை

இந்த மர்ம மரணத்தை நான் கண்டு பிடிக்க வேண்டும், நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று கேட்டது பன்னீர்செல்வம். ஆனால் அந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இப்போதைய நிலை என்ன? துணை முதலமைச்சர். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அந்த விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷனை ஒரு எட்டு முறை தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் உண்மை தெரியவில்லை இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. காலநீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது மட்டுமல்ல பல முறை இதே ஓ.பன்னீர் செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், இதுவரைக்கும் அவர் போகவில்லை.

மறந்து விட்டார்கள்

மறந்து விட்டார்கள்

இன்றைக்கும் அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அம்மையார் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி இன்றைக்குக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுத்தமாக அம்மையாரை மறந்து விட்டார்கள். வெளி வேஷத்திற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக அந்தப் படத்தைச் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த மரணத்திற்கு யார் காரணம்? என்பது கண்டுபிடிக்கப்படும். அவர்களைக் கொண்டு வந்து கூண்டில் ஏற்றுவோம். அவர்களைக் கொண்டு வந்து மக்கள் முன்னால் நிற்க வைப்போம்.

உறுதி மொழி தருகிறேன்

உறுதி மொழி தருகிறேன்

டெல்லியில் கோடிக்கணக்கில் விவசாயிகள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அங்கே குடும்பம் குடும்பமாக வந்து கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் தாண்டி விட்டது. இன்றைக்கு 33வது நாள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுக்கு அதற்கு ஆதரவாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தரப்பு மக்களுக்கும் எவ்வளவு பிரச்சனைகள். உங்களை பொறுத்தவரைக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலைத்திட்டம். அது 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று உறுதிமொழி தருகிறேன்.

அறிக்கை விட்டேன்

அறிக்கை விட்டேன்

கொரோனோ காலம் எப்படிப்பட்ட காலம். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. வாழ்வாதாரத்தை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. நெசவாளர் தொழில் செய்ய முடியவில்லை. வேலைக்குப் போக முடியவில்லை. கூலி வேலை செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை. கல்லூரிகள் இல்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் ஒரு அறிக்கை விட்டேன். வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்க கூடிய மக்களுக்கு உடனே நிவாரணமாக இந்த அரசாங்கம் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.

ஏற்றுகொள்ளவில்லை

ஏற்றுகொள்ளவில்லை

இதுவரைக்கும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இப்பொழுது நான்கு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. அதனால் தேர்தல் வரப்போகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பொங்கலுக்காக 2500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். அதனை நான் வரவேற்கிறேன். இன்றைக்கு அதனைத் தேர்தலுக்காக எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தான் நான் இங்கு வந்தேன். ஒரு ஆதாரம் ஒன்று இருக்கிறது.

இது அதிமுக பணமா?

இது அதிமுக பணமா?

அதாவது பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள், சில இடங்களில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் சில புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஏதோ அ.தி.மு.க. பணத்தை எடுத்துக் கொடுப்பது போல முதலமைச்சர் படத்தை மட்டும் அல்ல அந்த தொகுதி எம்.எல்.ஏ., அந்த மாவட்டத்தின் அமைச்சர் படம் இதையெல்லாம் போட்டு, அ.தி.மு.க.காரர்களாகப் பார்த்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நியாயம் வேண்டும்

நியாயம் வேண்டும்

இதைப் பற்றித்தான் நம்முடைய வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி அவர்களும், நம்முடைய வழக்கறிஞர்களும் தேர்தல் கமிஷனில் சென்று புகார் கொடுத்தார்கள். இதனைக் கட்சிக்குப் பயன்படுத்துகிறார்கள், தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தி.மு.க. இதைத் தடுக்க முயற்சி எடுக்கிறது' என்று சொல்கிறார். இதை நாங்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. நியாயமாக கொடுக்க வேண்டும் என்றுதான் கொடுக்கச் சொல்லுகிறோம். இந்த நிதியை முறையாகக் கொடுக்க வேண்டும், நியாயமாகக் கொடுக்க வேண்டும், நேர்மையாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி

நாடாளுமன்றத்தில் எவ்வாறு 39 இடங்களுக்கு 38ல் வெற்றி பெற்றோமோ, அதேபோல் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இருக்கிறோம். அந்த நம்பிக்கை எங்களைவிட உங்களுக்கு இருக்கிறது. மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் இருக்கிறது.இந்தப்பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி சிலர் இங்குப் பேசினார்கள். இது அவர்களுடைய கருத்து மட்டுமல்ல. இந்த அனந்தலைப் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து மக்களின் கருத்து.

இருவருக்கும் இடையே போர்

இருவருக்கும் இடையே போர்

இப்பொழுது ஆட்சியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு அடுத்த நிலையில் இருப்பது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. என்ன போர் என்று உங்களுக்குத் தெரியும். அதனால் என்ன செய்தார்கள் என்றால், கூடி உட்கார்ந்து பேசி அ.தி.மு.க. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

முதல்வர் யார்?

முதல்வர் யார்?

ஆனால் இப்பொழுது இரண்டு நாட்களாக வருகிற செய்தி என்னவென்றால் அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அதனை பா.ஜ.க.தான் முடிவு செய்யும். டெல்லியில் இருக்கக்கூடிய மோடிதான் முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள். எந்த நேரத்தில் ஓ.பி.எஸ். அந்த கட்சியிலிருந்து கழன்று செல்வார் என்று தெரியவில்லை. எப்பொழுது அந்தக் கட்சி உடைய போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அந்த கட்சி உடைய போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. யார் முதலமைச்சர் என்பதே அவர்களுக்குக் குழப்பமாக உள்ளது.

சிறப்பாக இருக்கும்

சிறப்பாக இருக்கும்

தி.மு.க.வைப் பொறுத்த வரைக்கும் முதலமைச்சர் வேட்பாளர்கள் எல்லாம் இல்லை, தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் உங்களிடத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்? தளபதி... தளபதி... தளபதி...வீட்டிற்கு வாங்கக் கூடிய எந்தப் பொருளாக இருந்தாலும் சிந்திக்கின்ற நீங்கள், நம் நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நாடு நம் பக்கம் இருந்தால்தான். தி.மு.க. பக்கம் இருந்தால் தான், தி.மு.க. ஆட்சியில் இருந்தால் தான், இந்த நாடு சிறப்பாக இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
The AIADMK regime is at the forefront of corruption today and forever. MK Stalin said that corruption, commission and collection was their policy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X