சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி.. 7.5% இடஒதுக்கீடு.. பிஇ மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்

மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் இன்று வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: 7.5% அரசுப்பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி ஒதுக்கீடு கல்லூரி கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    மாணவர்கள் ஹேப்பி.... 7.5% உள்ஒதுக்கீடு... பொறியியல் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்… முதல்வர் அறிவிப்பு

    தமிழகத்தில் கடந்த வருடங்களில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்து காணப்பட்டது..

    எனவே, அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கான தடையாக உள்ள காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து அதற்கு உரிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கையும் பெறப்பட்டிருந்தது.

    குட் நியூஸ்.. மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழக அரசு அறிவிப்பு! குட் நியூஸ்.. மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

     பரிந்துரைகள்

    பரிந்துரைகள்

    அந்த கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, அதனை செயல்படுத்தும் விதமாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை போல, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் மற்ற தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது... இதை உறுதிசெய்யும் வகையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டது... இதற்கு அனைத்து கட்சிகளுமே ஆதரவு தந்தன.

     ஒதுக்கீடு

    ஒதுக்கீடு

    இதேபோல், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுவும் நடந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் இன்று வழங்கினார்.. பி.இ. மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.. இந்த விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.. சேர்க்கை ஆணைகளை வழங்கி முதல்வர் பேசும்போது சொன்னதாவது:

     விடுதிக்கட்டணம்

    விடுதிக்கட்டணம்

    "அரசுப்பள்ளி மாணாக்கருக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் சுமார் 10,000 பேர் பயனடைவார்கள்.. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.. அரசு பள்ளிகளில் பயின்று 7.5% உள்ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை அரசே ஏற்கும்..

     இறையன்பு

    இறையன்பு

    ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் கூட நிச்சயமாக இந்த படிப்புக்கு வர முடியும் என்று சற்று முன்பு பேசிய தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார்... ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை செலவாகிறது... 7.5% ஒதுக்கீட்டில் கால்நடை, சட்டம், வேளாண்மை படிப்புகளில் 300 மாணவர்கள் பயன்பெறுவர்.. உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும்" என்றார்.

    English summary
    MK Stalin says, 7.5% reservation be the Govt will accept the fees of students
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X