சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?.. முதல்வருக்கு ஸ்டாலின் நறுக் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நறுக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகும் வகையில் மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதை சட்டமாக்க ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 40 நாட்களாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுகுறித்து எந்த பதிலையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

சட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே!சட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே!

7.5% மசோதா

7.5% மசோதா

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஆளுநர் பதிலளிக்கையில், 7.5 சதவீத மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை.

கால அவகாசம்

கால அவகாசம்

3 முதல் 4 வாரங்கள் வரை கால அவகாசம் தேவை. இதையே என்னை சந்தித்த அமைச்சர்கள் குழுவிடமும் தெரிவித்ததாக ஆளுநர் பதிலளித்திருந்தார். ஏற்கெனவே 30 நாட்கள் மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு தற்போது மீண்டும் கால அவகாசம் கேட்பதா என கேட்டு இன்று ராஜ்பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக தலைவர்

திமுக தலைவர்

அதன்படி ராஜ்பவன் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள் துரைமுருகன், மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், எம்பி டி ஆர் பாலு, தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கால அவகாசம்

கால அவகாசம்

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினை திமுக அரசியல் செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். நான் கேட்கிறேன், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவே இல்லை. ஆளுநரை முதல்வர் கேள்வி கேட்காமல் விட்டாலும் நான் விட மாட்டேன். 40 நாட்களாக மசோதா மீது முடிவெடுக்காமல் இன்னும் காலஅவகாசம் கேட்பதா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

English summary
DMK President MK Stalin says Neet exam was not entered into Tamilnadu in Karunanidhi and Jayalalitha regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X