சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 முக்கிய துறைகளை சீரமைத்தால் தமிழகம் தலைநிமரும்- உறுதிமொழியை வெளியிட்ட ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 7 துறைகளை சீரமைப்பதுதான் எனது முதல் பணி என 7 உறுதிமொழிகளை ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக் கூட்டம் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு வெள்ளி வாள் வழங்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் பேசிய போது தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக் கூட்டத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி. திமுக தலைவராக 2018ஆம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பொறுப்பேற்றேன்.

கலைஞர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார்.. ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளால் துரைமுருகன் ஆனந்த கண்ணீர்கலைஞர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார்.. ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளால் துரைமுருகன் ஆனந்த கண்ணீர்

நல்லதொரு எதிர்காலம்

நல்லதொரு எதிர்காலம்

இன்று முதல் ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன் என அன்று சொன்னேன். நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு எனது கனவு திட்டத்தை இன்று அறிவிக்கிறேன். எந்த திருச்சியில் நாம் கூடியிருக்கிறோம்? கட்சி தொடங்கியவுடன் வீதியில் பேசிக் கொண்டிருக்கும் திமுகவினர் சட்டசபையில் பேச தைரியம் உண்டா என கேட்டனர்.

வேண்டாமா

வேண்டாமா

அப்போது நாம் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என முடிவெடுத்த இடம்தான் இந்த திருச்சி. அன்று உங்கள் அனுமதியுடன் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் போனோம். ஒரு முறை இரண்டு முறை அல்ல தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சி நடைபெற்றது.

நேருவுக்கு பாராட்டு

நேருவுக்கு பாராட்டு

இந்த பொதுக் கூட்டத்தை மாநாடு என்று அறிவிக்கவில்லை. மாபெரும் கூட்டம்னுதான் சொன்னேன். கழகத்தின் முதன்மை செயலாளர் கே என் நேருவும் அவரது பணியாற்றியோரும் மாநாடாக நடத்திவிட்டார்கள். நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு. எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும் நட்பை நெஞ்சுக்கு நெஞ்சாக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டம்

நேருக்கு நேர் நேருதான்னு சொல்லலாம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி , காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் முப்பைட தளபதி போல் நடத்தியிருக்கிறார்கள். 5 பெரும் கொள்கைகளை வடித்த திருச்சி. என்னுடைய தொலைநோக்கு திட்டத்தை வெளியிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சி நாசம்

அதிமுக ஆட்சி நாசம்

திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் அதிமுக ஆட்சி நாசமாக்கிவிட்டது. இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைப்போம். மே 2ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய விடியலாக திமுக ஆட்சி அமையவிருக்கிறது. எனது 10 ஆண்டு திட்டத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

7 துறைகள்

7 துறைகள்

ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்னு பெயர் சூட்டியுள்ளேன். பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய அழைத்தும் முக்கியமானவை. இந்த 7 துறைகளையும் சீரமைப்பதே எனது முதல் பணி.

7 இலக்குகள்

7 இலக்குகள்

இதை எப்படி நிறைவேற்றுவது என்பதை சொல்கிறேன். வளரும் வாய்ப்புகள் வளமான தமிழகம், மகசூல் பெருக்கும் மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய 7 இலக்குகளின் மூலம் இந்த 7 உறுதிமொழிகளையும் நிறைவேற்றலாம் என்றார் ஸ்டாலின்.

English summary
DMK President MK Stalin says about 7 promises to uplift Tamilnadu. Its a 10 years vision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X