சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின்-சந்திரசேகர ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமானது: திமுக அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு-வீடியோ

    சென்னை: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவுடனான மு.க.ஸ்டாலின் சந்திப்பு, மரியாதை நிமித்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்.

    MK Stalin says he met Telangana Chief Minister KCR out of courtesy.

    காங்கிரஸ், பாஜக தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்குவதற்காக தீவிர முயற்சி எடுத்து வருபவர் சந்திரசேகரராவ். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் முக்கியமான ஒரு கட்சி திமுக.

    இந்த நிலையில், ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் நடத்திய சந்திப்பு அகில இந்திய அரசியலில் கூட பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு நிறைவடைந்ததும் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பார்கள்.. அப்போது சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று மக்கள் நினைத்திருந்தனர்.

    ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை.. சந்திரசேகர ராவ், ஸ்டாலின் பிரஸ் மீட்டை தவிர்த்தது ஏன்? இதுதான் பின்னணி ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை.. சந்திரசேகர ராவ், ஸ்டாலின் பிரஸ் மீட்டை தவிர்த்தது ஏன்? இதுதான் பின்னணி

    ஆனால் இருவருமே செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டனர். சந்திப்பு நிறைவடைந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, திமுக தலைமையிடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனான ஸ்டாலின், சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சந்திரசேகரராவை சந்தித்தால், தேவையில்லாத யூகங்கள் உருவாகும் என ஸ்டாலின் நினைத்ததாகவும், ஆனால், சந்திரசேகரராவ், தொடர்ச்சியாக நேரம் கேட்டதால், அவரை சந்திக்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாகவும், திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    DMK President MK Stalin says he met Telangana Chief Minister KCR out of courtesy. Sources say party conveyed to KCR its clear stand alliance with Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X