சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், உங்க 'பாட்சா' பலிக்காது, வேலையை காட்டாம விடமாட்டாங்க.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin about Vellore Election: உங்க பாட்சா பலிக்காது -ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும். ஆளும் கட்சியினர் கோடிக்கோடியாக பணத்தை கொட்டினாலும் இந்த தேர்தலில் மக்களிடம் அவர்களின் பாட்சா பலிக்காது என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து, தூத்துக்குடி கனிமொழி இல்லத்தில் ரெய்டு என பல நகர்வுகள் தேர்தல் நெருங்கும் வேளையில் நேற்று நடந்துள்ளது.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக சென்னை கோபாலபுரத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம்சாட்டினார்.

    வேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா? முஸ்லீம் லீக் சரமாரி கேள்வி வேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா? முஸ்லீம் லீக் சரமாரி கேள்வி

    வேலுமணி மீது புகார்

    வேலுமணி மீது புகார்

    அந்த பேட்டியில் ஸ்டாலின் கூறியதாவது: "தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார் வந்துள்ளன. ஆனால் அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வேலுமணிக்கு முழு அளவில் பினாமியாக உள்ள சபேசன் என்கிற ஒப்பந்ததாரருக்குதான் எல்லா பணிகளும் இந்த ஆட்சியில் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக உள்ளாட்சி பணிகள் அவருக்கு வழங்கப்படுகிறது. அவருடைய வீட்டில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. ஆக அதைப்பற்றி இதுவரை எந்த செய்தியும் வரவில்லை.

    கோடிகளை கொட்டினாலும்

    கோடிகளை கொட்டினாலும்

    இந்த தேர்தலில் நான் உணர்ந்து கொண்டு இருப்பது என்னவென்றால் ஆளும்கட்சியை சார்ந்தவர்கள், எவ்வளவு தான் இந்த தேர்தலுக்கு செலவு செய்தாலும், குறிப்பாக வாக்குக்கு ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என அதையும் தாண்டி வழங்கினாலும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சியையும், மத்தியில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சியையும், அப்புறப்படுத்துவதற்கு மக்கள் உறுதி எடுத்து இருக்கிறார்கள்.

    புதுமையான தேர்தல்

    புதுமையான தேர்தல்

    எவ்வளவு தான் கோடி கோடியாக பணத்தை கொட்டி கொடுத்தாலும் மக்களிடத்தில் இவர்களது பாட்சா பலிக்காது. இந்த தேர்தல் புதுமையான தேர்தலாக அமையப்போகிறது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாதவர்கள் நாங்கள் என வாக்காளர்களால் இந்த தேர்தல் நிரூபிக்கப்படும் என திடமாக நான் நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்.

    அஞ்சமாட்டோம்

    அஞ்சமாட்டோம்

    மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஸ்டாலின் பேசுகையில், "எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே திட்டமிட்டு வருமான வரி சோதனையை நடத்தப்படுகிறது. இதன் மூலம் வேட்பாளர் பயந்துவிடுவார்கள், வேட்பாளர்களிடம் வேலை பார்ப்பவர்கள் பயந்துவிடுவார்கள். திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் வேலை செய்யாமல் படுத்துவிடுவார்கள், பூத் ஏஜெண்டுகள் எல்லாம் சோர்ந்துவிடுவாங்க என்று நினைக்க வேண்டாம். இந்த மிரட்டலுக்கு எல்லாம் திமுக அச்சப்படாது" என்று ஸ்டாலின் கூறினார்.

    English summary
    dmk leader mk stalin says, Modi govt threaten opposition parties by income tax raid. but dmk peoples not afraid to see Raid
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X