சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mk stalin reply to ramadoss in twitter

    சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்றும் இது தனியாருக்கு சொந்தமாகப் பாத்தியப்பட்ட மனை என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான அசுரன் திரைப்படத்தை, திரையரங்கில் சென்று கண்டு ரசித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல.. பாடம் என்று தெரிவித்தார்.

     பஞ்சமி நிலம்

    பஞ்சமி நிலம்

    இதற்கு பதிலடியாக பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்ககத்தில் " பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

     ஸ்டாலின் பதிலடி

    ஸ்டாலின் பதிலடி

    இதற்கு தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்து முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கான பட்டாவையும் வெளியிட்டுள்ளார்.

    பட்டா மனை

    அந்த பதிவில், "மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது "முரசொலி " இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!" என குறிப்பிட்டுள்ளார்.

    விலக தயாரா

    மற்றொரு பதிவில், "நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    English summary
    mk stalin says murasoli building not panjami land, this is private land. before pmk leader ramadoss accuses murasoli building panjami land
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X