சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபையின் ஆணி வேரையே அசைப்பதா.. மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள்.. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டசபை கூட்டத் தொடர் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்றைய தினம் தொடங்கியது. அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பாக சட்டசபையில் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசின் மசோதாவை 27 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது ஜனநாயகப் படுகொலை. நாடாளுமன்றத்துக்கு இணையாக சட்டம் இயற்ற சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

என் மேல மை தடவினார்.. மயக்கம் ஆனேன்.. கண் திறந்து பார்த்தால்.. பெண் போலீஸ் அதிர்ச்சி புகார்என் மேல மை தடவினார்.. மயக்கம் ஆனேன்.. கண் திறந்து பார்த்தால்.. பெண் போலீஸ் அதிர்ச்சி புகார்

தத்துவம்

தத்துவம்

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அணுக வேண்டும். நீட் மசோதாவை மத்திய அரசு நிராகரிப்பதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

முதலில்

முதலில்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சட்டப்பேரவை ஆணி வேரை அசைத்துப் பார்த்த மத்திய அரசை கண்டிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தீர்மானத்தை நிறைவேற்றுவது என மத்திய அரசு முதலில் கூறியது.

நிராகரிப்பு

நிராகரிப்பு

தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாக்களையே மத்திய அரசு நீர்த்து போக செய்துவிட்டது. நீட் தேர்வு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என்றார் ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு

அப்போது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், நீட் மசோதா நிராகரிப்பு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது. முதல்வரிடம் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும் என்றார். நீட் விவகாரத்தில் நல்லத் தீர்வு காண முயற்சிப்போம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நீட் விவகாரம் குறித்து சட்டசபையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.

English summary
DMK President MK Stalin says that ADMK Government should pass resolution condemning Centre for rejecting Neet Exemption bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X