சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனினும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

MK Stalin says that ADMK government should pressurise centre to remove Neet

இந்த நீட் தேர்வினால் அரியலூர் அனிதா உள்ளிட்ட எத்தனையோ மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இன்னும் சிலரோ எப்படியாவது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் ஆள்மாறாட்டம் செய்த செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், போலி இரட்டை இருப்பிட சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இளைஞர்களின் கனவுகளை நீட் சிதைக்கிறது.

விஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைதுவிஸ்வரூபம் எடுக்கும் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வெளிநாடு தப்பியுள்ள இர்பானின் தந்தை வேலூரில் கைது

அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்நிலை குழு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி அண்மையில் நடந்து வரும் ஆள்மாறாட்ட முறைகேடு வரை நீட் தேர்வு தமிழக மாணவர்களை ஏமாற்றுகிறது. எனவே நீட் தேர்வுக்கு தடை விதிக்க அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
DMK President MK Stalin says that ADMK government should pressurise centre to remove Neet in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X