சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விளாத்திக்குளத்தில் 3 பெட்டிகளை காணவில்லை.. திமுக வெற்றியை தடுக்க சதி.. ஸ்டாலின் பரபரப்பு புகார்

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி நிலவரத்தை அறிவிக்காமல் அதிமுக சதி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிகளில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றும் அதன் நிலவரத்தை தேர்தல் அதிகாரிகள் அறிவிக்க மறுக்கிறார்கள் என ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெறுகிறது.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது... குவியும் பாராட்டுக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது... குவியும் பாராட்டுக்கள்

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு

திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை நோக்கி முந்தி கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்கள் அணி முன்னணியில் இருந்து வருகிறது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்துள்ளனர்.

காவல் துறை அதிகாரிகள்

காவல் துறை அதிகாரிகள்

அதிகாரிகள், காவல் துறை துணையுடன் வெற்றியை தடுக்க சதி திட்டம் தீட்டி வருகின்றனர். எடப்பாடி தொகுதியில் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டிய முடிவை அறிவிக்கவில்லை. ஆனால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தபடியே முதல்வரின் மைத்துனர் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்

துணை முதல்வர்

துணை முதல்வர்

இதனால் அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றனர். அது போல் எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் திமுக முன்னணியில் உள்ளது. விளாத்திக்குளத்தில் 3 வாக்குப் பெட்டிகளை காணவில்லை. துணை முதல்வரின் போடி பகுதியில் இன்னும் நிலவரங்களை அறிவிக்கவில்லை.

நடவடிக்கை

நடவடிக்கை

மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தோம். அப்போது எங்கள் முன்பே அதிகாரிகளை தொடர்பு கொண்ட ஆணையர் எங்கள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

நம்பிக்கை

நம்பிக்கை

பின்னர் இன்னும் அரை மணி நேரத்தில் அனைத்து குழப்பங்களும் சரி செய்யப்படும் என எங்களிடம் மாநில தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார். அந்த நம்பிக்கையில்தான் நாங்கள் இங்கிருந்து கிளம்புகிறோம்.

தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனுதமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனு

நீதிமன்றத்தை நாடுவோம்

நீதிமன்றத்தை நாடுவோம்

ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையத்தில் வந்து உண்ணாவிரதம் இருப்பதா, இல்லை மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார் ஸ்டாலின்.

English summary
DMK President MK Stalin says that ADMK is trying to curb our victory using their influence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X