சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருத்து கணிப்புகள் குறித்து எப்போதும் கவலைப்பட்டதில்லை- முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து எப்போதும் திமுக கவலைப்பட்டதில்லை என அதன் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் கருத்து கணிப்புகள் வெளியாகின.

இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பேரிடி காத்திருக்கிறது என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும்: இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.. எடப்பாடியார்! அதிமுக குறைந்த இடங்களை பிடிக்கும்: இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.. எடப்பாடியார்!

திமுக தலைவர்

திமுக தலைவர்

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தமட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் கருத்து கேட்கப்பட்டது.

மே 23-க்கு பிறகு

மே 23-க்கு பிறகு

அப்போது அவர் கூறுகையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி, மே 23-ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

கருணாநிதி வழிகாட்டல்

கருணாநிதி வழிகாட்டல்

கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை திமுகவிற்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும், அதனை ஒருபோதும் பொருட்படுத்துவது இல்லை. எங்களுக்கு திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வழிகாட்டி இருக்கிறார்.

ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் பேச்சு

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களின் கணிப்பு என்னவென்று தெரிந்து கொள்ளலாம். தற்போதைய தேர்தல் சூழலை ஒட்டி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கிறார். சந்திரபாபு நாயுடு பலமுறை என்னை சந்தித்து பேசியுள்ளார் என்றார் ஸ்டாலின்.

English summary
DMK President MK Stalin says that DMK never bother about Poll surveys whether it is favour or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X