சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கை.. மக்களை ஒடுக்க மனுதர்மத்தின் 'வர்ண'ப்பூச்சோடு வருகிறது.. ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்விக்கொள்கை மக்களை ஒடுக்க மனுதர்மத்தின் 'வர்ண'ப்பூச்சோடு வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. மும்மொழிக்கொள்கை தொடங்கி எம்பில் படிப்புகள் நீக்கம் வரை முக்கியமான நடைமுறைகள், அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.இதன் மூலம் கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் புதிய கல்விக்கொள்கையை தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறார். அதோடு திமுக கூட்டத்தில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!! சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!!

கனவு சிதைப்பு

கனவு சிதைப்பு

அதில், நீட் மருத்துவக் கனவைச் சிதைத்தது. பிசி மற்றும் எம்பிசி இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைக்கப்பட்டது. அடுத்து, புதிய கல்விக்கொள்கை மாநில உரிமைகளை பறித்து, பிற மொழி, தேசிய இனங்களை சிதைத்து மக்களை ஒடுக்க மனுதர்மத்தின் 'வர்ண'ப்பூச்சோடு வருகிறது. இது புதிய கல்விமுறை அல்ல, பழைய ஒடுக்குமுறை மீதான வர்ண பூச்சு. அனைவருக்கும் சமமான கல்வியின் நூற்றாண்டு மாடல் தமிழ்நாடுதான்.

மாடல்

மாடல்

மதிய உணவு, சத்துணவு,முட்டையடைந்ந சத்துணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி பள்ளி இடைநிற்றலில்லை தமிழகம்தான் குறைந்தது. சமச்சீர் கல்வி மூலம் நல்ல மதிப்பெண், சிறப்பான உயர் கல்வி வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் சாதனைகளை செய்தனர்.

நல்ல சாதனை

நல்ல சாதனை

நன்றாக செயல்பட்டு வந்த 10+2 முறையை நீக்கி 5+3+3+4 திட்டத்தையே கொண்டு வருவது தவறு. மத்திய அரசின் கட்டுப்பாட்டு கூட்டாச்சி தத்துவத்தின் மீதா கோடாரி வெட்டு. இதில் ஆளும் அதிமும் அரசின் நிலைப்பாடு என்ன என்பது ஆள்வோருக்கும் தெரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை.

நாளை எப்படி

நாளை எப்படி

ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்!நாளை . இது தொடர்பாக எம்பி கனிமொழி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, வசந்தி தேவி, கருணானந்தம், ராமானுஜம், மருத்துவர் எழிலன் பங்கேற்கும் புதிய கல்விக்கொள்கை 2020 என்ற நிகழ்வு நடைபெறும். இடஒதுக்கீடு வழக்கைப் போல இதிலும் வெல்வோம். என்று திமுக தலைவர் ஸ்டாலின், குறிப்பிட்டுள்ளார்.

English summary
MK Stalin says that the NEP 2020 is against Equality of people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X