சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி முடிவால் குஷியோ, குஷி... மக்களுடன், மு.க.ஸ்டாலின் எடுத்த அசத்தல் செல்பிய பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுடன் எடுத்து கொண்ட செல்பி வைரலாகி வருகிறது.

'இவர்தான் மக்களின் தலைவர்" எனவும் ''ரஜினி முடிவால் தலைவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை'' எனவும் நெட்டிசன்கள் அந்த படத்துக்கு கீழே கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

MK Stalin selfie taken with the people is goes on viral

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அனந்தலை கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர், எல்லாத் துறைகளிலும் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகக அனைத்து நாளிதழ்களிலும் தமிழக அரசு இரண்டு பக்கங்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. இது அப்பட்டமான பொய். ஊழல், கொலை, கொள்ளையில்தான் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பல கோடிகளில் மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.

நாற்காலியிலிருந்து இழுத்து.. பதற வைத்த சம்பவம்.. கர்நாடக மேலவை துணை தலைவர் ரயில் முன் பாய்ந்தது ஏன்?நாற்காலியிலிருந்து இழுத்து.. பதற வைத்த சம்பவம்.. கர்நாடக மேலவை துணை தலைவர் ரயில் முன் பாய்ந்தது ஏன்?

அந்த கூட்டம் முடிந்ததும் பெண்கள் உள்பட அனைவருடனும் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார். ''என்றும் உங்களில் ஒருவன்" என்ற வாக்கியத்துடன் அந்த செல்பி புகைப்படம் தி.மு.க.வின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட சில நிமிடங்களில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர்தான் மக்களின் தலைவர் என தி.மு.க. தொண்டர்கள் உள்பட ஒரு தரப்பினரும், ரஜினி முடிவுக்கு பிறகுதான் இவருக்கு சந்தோஷமே வந்துள்ளது என மற்றோரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

English summary
DMK on behalf of the People's Grama Niladhari Council meeting held on behalf of the DMK in Walaja Ananthalai village in Ranipettai district. Leader MK Stalin, Selby taken with the people is going viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X