சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேகதாது தீர்மானம்: மத்திய அரசை கண்டிக்கும் வார்த்தை இல்லையே.. ஸ்டாலின் விளாசல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தீர்மானத்தில் மத்திய அரசை கண்டிக்க தமிழக அரசு மறுப்பு - ஸ்டாலின்

    சென்னை: மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

    ஸ்டாலின் பேட்டி இதுதான்: மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திமுகவைப் பொறுத்த அளவில் அரசியலுக்கு அப்பாற்பட்டு இது தமிழக வாழ்வாதார பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு, தீர்மானத்தை ஆதரித்து பேசியிருக்கிறோம்.

    MK Stalin slam Tamilnadu government over Mekedatu resolution

    ஆதரித்துப் பேசிய அதே நேரத்தில், நான் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். நியாயமாக நீர்வள ஆணையத்தை கண்டிக்கக்கூடிய அதேநேரத்தில், மத்திய அரசையும் கண்டித்து தீர்மானத்தில் வார்த்தை இடம் பெற வேண்டும். இது வெறும் வேண்டுகோள் விடுக்கும் அளவில்தான் அமைந்துள்ளது. கண்டன தீர்மானமாக நிறைவேற்றி இருந்தால் அது முழுமை அடையும் வகையில் இருந்திருக்கும் என்று கூறினேன்.

    இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினாலும் கூட, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றி தந்துள்ளோம்.

    தீர்மானம் மட்டும் போதாது.. பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும்.. சட்டசபையில் ஸ்டாலின் கோரிக்கை தீர்மானம் மட்டும் போதாது.. பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும்.. சட்டசபையில் ஸ்டாலின் கோரிக்கை

    இன்று சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டியதை, நாளை வரை நீட்டித்து புயலால் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து கொண்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு முழுமையான நிவாரணம் சென்று சேரவில்லை என்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

    பேரவைத் தலைவருக்கு நான் விடுத்த வேண்டுகோளை பேரவைத் தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்காக இந்த அரசை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

    English summary
    DMK chief and leader of the opposition in Tamil Nadu assembly MK Stalin told that he insist the Tamilnadu resolution which was passed on today against Mekedatu Dam scheme should include some words against union government, but the CM Edappadi Palanisamy denied that suggestion, he accusing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X