சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இரட்டை வேடம்''-மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

தேர்தல் நடைமுறைகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89.5 கோடி பணப்பட்டுவாடா செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்ஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்

 கண்டனம்

கண்டனம்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் பணப்பட்டுவாடா பட்டியலை கைப்பற்றியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யாத அதிமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

ஆபத்து

ஆபத்து

இந்த விவகாரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் கைகோர்த்து உள்நோகத்துடன் வேடிக்கை பார்ப்பது, நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு மிகப்பெரிய ஆபத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்.

அவமதிப்பு

அவமதிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் ஐ..ஏ.எஸ். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டது அறிந்தும், அவர் மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் விட்டு வைத்திருப்பது தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். ஆளுங்கட்சிக்கு கட்டுப்பட்டு தேர்தல் ஆணையத்தை அவமதித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என சாடியுள்ளார்.

ஊழலுக்கு துணை

ஊழலுக்கு துணை

அதிமுக அமைச்சர்கள், முதலமைச்சர் உறவினர்கள் இடங்களில் ரெய்டு நடத்தி பிறகு அந்த வழக்கிலிருந்து அவர்களை தப்ப வைக்க மத்திய பாஜக அரசு துணை போவதாகவும், இதிலிருந்தே ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசின் இரட்டை வேடம் வெளிப்படுவதாக சாடியுள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆர்.கே.நகரில் ரூ.89.5 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தேர்தல் அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை பாழ்பட்டுப் போய்விடும் என எச்சரித்துள்ளார்.

English summary
dmk president mk stalin demand to rk nagar money distribution case handover to cbi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X