சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9 'டூ' 7.. முதல் நாளே அசுர பாய்ச்சல்.. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமைச் செயலக நிகழ்வுகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழா மற்றும் தலைமைச் செயலக நிகழ்வுகள் குறித்த முழு விவரம் இங்கே.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்றக் குழுத்தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதன்படி, இன்று காலை 9 மணியளவில் சென்னை ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடக்கிறது. ஸ்டாலினுடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கொரோனா பரவலால், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது.

திமுக அமைச்சரவை பட்டியல் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு..?திமுக அமைச்சரவை பட்டியல் இது தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு..?

 வீட்டில் இருந்தே பார்க்கலாம்

வீட்டில் இருந்தே பார்க்கலாம்

பதவியேற்பு விழா காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஒன்றரை மணி நேரத்தில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி, மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், மற்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்க உள்ளனர். விழா லைவ் செய்யப்படும் என்பதால், தொண்டர்களும், பொதுமக்களும் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை காணலாம்.

 கலைஞர் நினைவிடம்

கலைஞர் நினைவிடம்

பிறகு, 10:45 மணி முதல் 12:10 மணி வரை மொத்தம் 6 இடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அதன்படி முதலில், பதவியேற்றவுடன் கலைஞர் நினைவிடம் செல்லும் ஸ்டாலின், அங்கு மலர் தூவி மரியாதை செய்து, தந்தை கலைஞரிடம் ஆசீர்வாதம் பெற்று, பெரியார் திடல் செல்கிறார். பிறகு பேராசிரியர் இல்லம் செல்லும் ஸ்டாலின், அதன்பிறகு கோபாலபுரம் செல்கிறார். இறுதியாக சி.ஐ.டி. வீட்டுக்கு ஸ்டாலின் செல்வார்.

 போர்க்கால பணிகள்

போர்க்கால பணிகள்

மாலை நான்கு முதல் 7 மணி வரை அடுத்த ஷெட்யூல் தொடங்குகிறது. இதில், மாலை தலைமைச் செயலகம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தனது ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டத்தை நடத்துகிறார். அதை முடித்த பிறகு, மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், நிர்வாகம் குறித்தும், கொரோனா போர்க்கால பணிகள் குறித்தும் அவர் பல ஆலோசனைகள் வழங்க உள்ளதாக தெரிகிறது.

 அசத்தும் ஸ்டாலின்

அசத்தும் ஸ்டாலின்

முன்னதாக, முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், தனது தலைமையில் அமையும் அமைச்சரவையில் நியமிக்கப்பட உள்ளோரின் பட்டியல் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சீனியர்ஸ், ஜுனியர்ஸ் என்று பலரும் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, அனைத்து முக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

English summary
stalin swearing-in as cm of TN ceremony - மு.க.ஸ்டாலின்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X