சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கை, இஐஏ இரண்டையும் திரும்ப பெறுக.. திமுக கூட்டத்தில் தீர்மானம்.. ஸ்டாலின் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும், இஐஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020யை கைவிட வேண்டும் என்று திமுக சார்பாக மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று திமுக சார்பாக அதன் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது.திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

MK Stalin took resolution against EIA and NEP in today DMK meet

முக்கியமாக தமிழகத்தில் புயலை கிளப்பி இருக்கும் புதிய கல்விக்கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 இரண்டையும் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் இன்று விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்

இந்த நிலையில் கூட்டத்தின் முடிவில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம். அதிமுக தலைமையிலான அரசு இதை எதிர்க்க வேண்டும் . தமிழகத்தில் இதை அமல்படுத்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று அவரின் நினைவை போற்றும் வகையில் தமிழகம் முழுக்க மக்களுக்கு நலப்பணிகளை திமுகவினர் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது.

3. சுற்றுசூழலுக்கு குந்தகம் விளைவிக்கும், மக்களின் உரிமையை பறிக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெற வேண்டும், என்றும் திமுக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

English summary
MK Stalin took a resolution against EIA and NEP in today's DMK meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X