சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம்மொழி நாளில் இந்தி குறித்து மத்திய அரசு அறிவிப்பு.. கருணாநிதி வாழ்கிறார்.. ஸ்டாலின் டுவீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்பில் எந்த நாளில் பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு!- வீடியோ

    சென்னை: இந்தி பாடம் கட்டாயம் இல்லை என கருணாநிதியின் பிறந்தநாளன்று மத்திய அரசு முக்கிய திருத்தம் மேற்கொண்டிருப்பது அவர் வாழ்கிறார் என்பதை காட்டுகிறது.

    தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

     MK Stalin tweet about Revised New Education policy

    இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இதற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி தமிழக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    விருப்பத்தின் அடிப்படையில் 3-ஆவது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தி மொழி பேசாத மமாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று கருணாநிதியின் 96-ஆவது பிறந்தநாள் செம்மொழி நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தி மொழி கட்டாயம் இல்லை என்று செம்மொழி நாளில் மத்திய அரசு அறிவித்ததை அடுத்து ஸ்டாலின் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்.

    சட்டசபைக்கு தேர்தல் வந்தால் எல்லாருமே பயங்கரமாக மண்ணை கவ்வுவார்கள் போலயே! சட்டசபைக்கு தேர்தல் வந்தால் எல்லாருமே பயங்கரமாக மண்ணை கவ்வுவார்கள் போலயே!

    இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்! என தெரிவித்தார்.

    English summary
    DMK president MK Stalin welcomes the Centre's alteration in New Education Policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X