சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2... விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: சந்திராயன் -2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை ஏவப்படும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம், நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது.

MK Stalin Tweet: I extend my heartfelt congratulations to #ISRO and all those who are associated with Chandrayaan2

இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-2 செலுத்தப்படும். பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும்.

இந்நிலையில், சந்திராயன் - 2 வுக்காக பணியாற்றிய அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரோ மற்றும் சந்திராயன் 2 உடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது நாட்டின் எதிர்காலம், அறிவியல் முன்னேற்றங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளது என்றும், மூன் மிஷன் மற்றும் இன்னும் பல முயற்சிகள் வெற்றியடைய திமுக சார்பில் வாழ்த்துவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

English summary
MK Stalin Tweet: I extend my heartfelt congratulations to #ISRO and all those who are associated with #Chandrayaan2. Our nation's future is closely linked to our scientific advances. On behalf of the DMK, I wish them a successful Moon Mission and many more such endeavours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X