சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்

    சென்னை: அதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி (எ) அனுராதா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறி இறங்கியது.

    இதில் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது. பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு சுயநினைவு திரும்பவில்லை.

    பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி... சந்திரபாபு நாயுடு மகன் மீது புதிய புகார்பேக்கரிக்கு ரூ.15 லட்சம் பாக்கி... சந்திரபாபு நாயுடு மகன் மீது புதிய புகார்

     புதிதாக வேலை

    புதிதாக வேலை

    இவரது கால் அகற்றப்பட்டது. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். சில வாரங்களுக்கு முன்புதான் ஹோட்டலில் அக்கவுண்ட்டன்டாக வேலைக்கு சேர்ந்தார்.

     திமுக தலைவர் சந்திப்பு

    திமுக தலைவர் சந்திப்பு

    அறுவை சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின், அந்த பெண்ணையும் அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    விபத்து

    விபத்து

    அப்போது அவர் ரூ 5 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலின் கூறுகையில், அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன்.

    ஆணவம் கூடாது

    திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! என தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK President MK Stalin says that he will help the victim Rajeshwari to install artificial legs. He also meet her parents and expressed his concern.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X