சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Jacto Geo Protest: போராட்டத்தை கைவிடுங்கள்.. திமுக ஆட்சி அமைக்கும் வரை பொறுங்கள்.. ஸ்டாலின் அறிவுரை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ

    சென்னை: மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    2004-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    MK Stalin urges Jacto Geo association to give up protest

    9-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் போராட்டத்தை கைவிடுமாறு அரசு பல்வேறு வகைகளில் அழுத்தமும், கெடுவும் கொடுத்தது.

    இதையடுத்து 99 சதவீதம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிகளுக்கு திரும்பி விட்டனர். எனினும் மீதமுள்ளவர்கள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் மாணவர்கள், மக்கள் நலன் கருதி ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வரும் வரை ஆசிரியர்களும் ஊழியர்களும் பொறுமை காக்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதிமுக எடுத்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்.

    போராட்டம் நடத்துவோர் மீது மிரட்டும் பாணியில் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது என்றார் ஸ்டாலின்.

    English summary
    DMK Vice President MK Stalin urges Jacto Geo Association to give up their protest and wait until for DMK to sit in power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X