சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.

அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக இது போற்றப்படுகிறது.

ஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்ஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

போட்டி தேர்வாளர்களுக்கு உதவி

போட்டி தேர்வாளர்களுக்கு உதவி

பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட நூலகமாக இது உருவாக்கப்பட்டது. பல லட்சம் புத்தகங்களைக் கொண்டிருக்கும் இந்நூலகம் போட்டி தேர்வாளர்களுக்கான வாசஸ்தலமாக திகழ்கிறது.

திருமண மண்டபமாக்கும் முயற்சி

திருமண மண்டபமாக்கும் முயற்சி

இதனிடயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தவும் கூட ஏற்பாடுகள் செய்தன. ஆனால் அத்தனையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

ஸ்டாலின் பார்வையிட்டார்

ஸ்டாலின் பார்வையிட்டார்

தற்போது தமிழக அரசின் பராமரிப்புடன் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், லோக்சபா எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர்.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்து

வருகைப் பதிவேட்டில் கையெழுத்து

அங்கு வைக்கப்பட்ட நூல்கள் குறித்து திமுகவினர் ஆய்வு செய்தனர். பின்னர் நூலக பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில் ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

அரசு நடவடிக்கையால் உறுப்பினர்

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின் இன்று அந்நூலகத்தில் உறுப்பினராக இணைந்தார் என தெரிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்' உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதனையடுத்து, இன்று காலை, #AnnaCentenaryLibrary சென்று என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

பராமரிக்க வலியுறுத்தல்

"மாணவர்களின் அறிவுத் தேடலுக்குப் பெரிதும் பயனளிக்கும் 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை', அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்காமல், இனியாவது தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்திடவும், படிக்க வரும் மாணவ-மாணவியர்கள் குறைகளை களைந்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்!" இவ்வாறு ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK President MK Stalin today visited Chennai Aanna centenary library and he has Joined as member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X