சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீர்னு வந்த போன்.. செம அப்செட்டான ஸ்டாலின்.. சைலண்ட்டாக முடிந்த "அந்த 6 தொகுதிகள்".. என்னாச்சு?

முக ஸ்டாலின், கொளத்தூரில் நிவாரணம் வழங்க இருந்தது தடை செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: கொளத்தூர் உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு மெகா ஐடியா தீட்டியிருந்திருக்கிறார்.. ஆனால், திடீரென ஒரு போன் வந்து அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கி உள்ளது.. இதனால் முக ஸ்டாலின் அப்செட்டின் உச்சத்துக்கு சென்றதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.. வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகமே காத்து கொண்டுள்ளது.. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நடந்து முடிந்துள்ளன.

இதற்கு நடுவில் ஏகப்பட்ட அனுமானங்கள், வியூகங்கள், கணிப்புகள், ஓடிக் கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்களையும் தமிழக மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அலர்ட்

அலர்ட்

இந்நிலையில், எந்த கட்சி சார்பாகவும் சின்ன பிரச்சனை கூட வந்துவிடக்கூடாது என்று விழிப்பாக இருந்து வருகிறார்கள்.. அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அலர்ட்டாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியை பற்றியும், அந்த தொகுதியில் ஸ்டாலின் மேற்கொண்ட நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஒரு செய்தி கசிந்து வருகிறது.

 நிவாரண உதவிகள்

நிவாரண உதவிகள்

திடீரென சென்னையில் கொரொனா தொற்று அதிகமாகிவிடவும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு வீரியத்துடன் இறங்கியது.. அதுபோலவே, திமுக தரப்பும் முனைப்பு காட்டியது.. குறிப்பாக தன்னுடைய கொளத்தூர் தொகுதியில், முக ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்யுமாறு கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 6 தொகுதிகள்

6 தொகுதிகள்

இதையடுத்து, கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர் போன்ற தொகுதிகளில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்க திமுக சார்பில் வழங்க ஏற்பாடானது.. இவைகளை கடந்த 9ஆம் தேதி நேரடியாக வந்து பொதுமக்களுக்கு வழங்கவும் ஸ்டாலின் பிளான் வைத்திருந்தாராம்.. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென ஒரு போன் வந்துவிட்டதாம்.

 நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், இவைகளை விநியோகிக்கக்கூடாது என்று சிலர் சொல்லவும், ஸ்டாலின் அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது.. அதற்கு பிறகு வேறு வழியில்லாமல், நிவாரண பொருட்களை திமுக நிர்வாகிகளே மக்களுக்கு அமைதியாக தந்துவிட்டு சென்றார்களாம். ஒருவேளை இந்த பொருட்களை ஸ்டாலின் தந்திருந்தால், நிச்சயம் அது தொகுதியில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் என்கிறார்கள்..

 உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

அதேபோல, இந்த பொருட்களை ஸ்டாலினே நேரடியாக சென்று விநியோகித்திருந்தால், அது கூடுதல் மவுசை தொகுதிகளில் ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ, அந்த போனில் பேசியது சில உயர் அதிகாரிகள் என்கிறார்கள்.. அவர்கள்தான் ஸ்டாலினை அலர்ட் செய்ததாகவும் தெரிகிறது.. தற்போது, சில அரசு உயர் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு ரகசியமாக போன் போட்டு வாழ்த்து சொல்லி வருவதாக செய்திகள் கசிந்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

English summary
MK Stalin was banned from providing welfare assistance in Kolathur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X