சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனல் பறக்கும் அரசியல் களம்.. திடீரென விஜயகாந்த்தை சந்தித்த ஸ்டாலின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாலினே நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்றது ஏன்?- வீடியோ

    சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. அதுவும் இன்றைய நாளில் தமிழக அரசியல் தலைவர்களும் படு டென்ஷனில் இருக்கிறார்கள்.

    அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்னும் வந்து சேரவில்லை என்பது பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. நேற்று காங்கிரசின் திருநாவுக்கரசர், இன்று காலை ரஜினி என்று ஒவ்வொருவரும் விஜயகாந்த் வீட்டையே சுற்றி வருகிறார்கள்.

    தேமுதிக

    தேமுதிக

    இதை பற்றி கேட்டாலும் அரசியல் எல்லாம் ஒன்னும் இல்லை, உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்தோம் என்கிறார்கள். எனினும் தேமுதிகவை இழுக்க ஆளாளுக்கு முயன்று வருவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இதனால் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

    திமுக தலைவர்

    திமுக தலைவர்

    இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்த்தை சந்திக்க போவதாக தகவல் வெளியாகின. அதன்படி இன்று விஜயகாந்த் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு விஜயகாந்த்தை அவர் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஸ்டாலின் சந்திப்பு

    ஸ்டாலின் சந்திப்பு

    இரண்டு, மூன்று நாட்களாகவே தேமுதிகவை உள்ளே இழுத்து போடும் முயற்சியில் திமுக இறங்கி வந்ததாகவும், ஆனால் தொகுதி பங்கீட்டில் அங்கேயும் இழுபறி எனவும் சொல்லப்பட்டது. இந்த பின்னணியில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    பரபரப்பு

    பரபரப்பு

    தற்போது ஸ்டாலின் நேரிடையாகவே இந்த விஷயத்தில் இறங்கி உள்ளதாலும், விஜயகாந்த் வீட்டுக்கே சென்றிருப்பதாலும் கூட்டணி குறித்த விஷயமாக இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயகாந்த்-ஸ்டாலின் இடையேயான இந்த சந்திப்பு அரசியல் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை நிமிடத்துக்கு நிமிடம் எகிற வைத்துள்ளது.

    English summary
    DMK Leader MK Stalin going to meet DMDK President VIjayakanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X