சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7.5% உள் ஒதுக்கீடு: அதிமுகவுடன் இணைந்து போராட்டம்- போராட்டத்தை முதல்வர் அறிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதை கண்டித்து அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயாராக இருப்பதாக அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக மருத்துவ மாணவர் சேர்க்கைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கால தாமதம் செய்து வருகிறார். இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படாத நிலை உள்ளது.

MK Stalin writes to Governor Banwarilal Purohit on 7.5% Bill assent

இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அமைச்சர்கள் குழு நேற்று சந்தித்து பேசியது. இந்த நிலையில் ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் தமது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட முதல்வர் முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

English summary
DMK president MK Stalin wrote to TamilNadu Governor Banwarilal Purohit requesting him to give assent to the Bill passed in Tamil Nadu Legislative Assembly to provide 7.5 per cent reservation for government school students in medical studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X