• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஸ்டாலின் ஏன் இப்படி செய்தார்.. நிறைய பேர் இருக்காங்களே.. "இவருக்கு" மட்டும் ஏன்.. பொருமும் கதர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து 2 விதமான செய்திகள் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், 1989ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 13ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகவே தொடர்ந்து செயல்பட்டும் வருகிறது.

பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி... காங்கிரஸில் செம புகைச்சல்... வாரியங்கள் கேட்டு நூற்றுக்கணக்கில் மனு பீட்டர் அல்போன்ஸுக்கு பதவி... காங்கிரஸில் செம புகைச்சல்... வாரியங்கள் கேட்டு நூற்றுக்கணக்கில் மனு

திருத்தம்

திருத்தம்

இந்த ஆணையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸை நியமித்து, கடந்த 29-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். .. அதன்படி நேற்று பீட்டர் அல்போன்சும் பதவியேற்று கொண்டார்.

பீட்டர் அல்போன்ஸ்..!

பீட்டர் அல்போன்ஸ்..!

முக ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்.. நம்பிக்கைக்கு பார்த்திரமானவர்.. கடந்த காலங்களில், எதிர்க்கட்சி தலைவராக இருந்போது, எத்தனையோ விவகாரங்களில் பீட்டர் அல்போன்ஸிடம் ஸ்டாலின் கருத்து கேட்டுள்ளார்.. ஆலோசனை நடத்தி உள்ளார்.. அவ்வளவு ஏன், இன்னைக்கு திமுகவுடன் காங்கிரஸ் கூட்டயில் இருக்கிறதென்றால் அதற்கு முக்கியமான காரணமே பீட்டர் அல்போன்ஸ்தான்..!

 2 தகவல்கள்

2 தகவல்கள்

இவருக்கு திடீரென அந்த பொறுப்பு வழங்கப்பட்டுவிடவும், பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. அதேசமயம், இந்த விவகாரம் குறித்து 2 தகவல்கள் கசிந்துள்ளன.. ஒன்று, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு சலசலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.. இதற்கு காரணம் தமிழக காங்கிரஸ் மேலிடம் இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாவது, தனிப்பட்ட பாசம் காரணமாக ஸ்டாலின் இந்த பதவியைக் கொடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

நெருக்கம்

நெருக்கம்

ஆனால், தன்னுடன் இருக்கும் நெருக்கத்துக்காகவோ, அல்லது நட்புக்காகவோ ஸ்டாலின் இந்த பதவியை தரவில்லை.. கிறிஸ்தவ பிஷப்களுடன் நெருக்கமாக இருப்பவர் பீட்டர் அல்போன்ஸ்.. அவர்களிடம் நல்ல செல்வாக்கும் உள்ளது.. இதனால், சிறுபான்மையினர் சம்பந்தமான அரசின் கொள்கைகளை பற்றி மிகவும் கவனத்துடனும் விழிப்புடனும் செயல்படுவார் என்பதாலேயே இந்த பதவி அவருக்கு சாலப்பொருத்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

அதுமட்டுமல்ல, கடந்த தேர்தலில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட்டிருக்க வேண்டியவர்.. அதுபோலவே, அல்போன்சுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று ஸ்டாலினும் அப்போதே முடிவு செய்திருந்தாராம்,.. ஆனால் அந்த சமயத்தில் பீட்டருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது.. இப்போது மனைவி இறந்துவிடவும், அந்த சோகத்தில் இருந்து மீட்டு, பொதுவாழ்வுக்கு அவரை அழைத்து வர வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் இந்த பதவியை தந்ததாக தெரிகிறது.

  இனி பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தை இருக்காது - Dindigul Leoni
  பொருமல்

  பொருமல்

  அதேசமயம், கேஎஸ் அழகிரியிடம் கேட்டுவிட்டுதான் பீட்டர் அல்போன்ஸை சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.. தேவையில்லாமல் இதை வைத்து யாரோ கிளப்பி விட்டுள்ளனர் என்கிறது ஒரு தரப்பு.. ஆனால் இன்னொரு தரப்பிலோ, பீட்டர் அல்போன்ஸ் போலவே எத்தனையோ சீனியர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கிறார்கள்.. ஏன், திமுகவிலேயே சிறுபான்மை ஆணையத் தலைவராக தகுதி பெற நிறைய பேர் இருக்கிறார்களே, அப்படி இருக்கும்போது இவருக்கு மட்டும் எதற்காக இந்த பதவி என்கிற பொருமலும் இருந்து வருகிறதாம்..!

  English summary
  MK Stalin's announcement and Peter alphonse state minority commission president posting
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X