சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நோ ரெஸ்ட்".. உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.. அடுத்தடுத்து சிக்ஸர் .. செம ஸ்மார்ட்.. பின்றாரே பி.கே.!

ஸ்டாலினின் புது பிரச்சார யுக்தி எதிர்தரப்பினருக்கு கலக்கத்தை தந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கையில் இன்னொரு அஸ்திரத்தை எடுத்துள்ளார் திமுக ஸ்டாலின்.. இதுவும் பிகே ஐடியா போலதான் தெரிகிறது.. ஆனால், இந்த ஐடியாவை கண்டு எதிர்க்கட்சிகள் மிரண்டு போய் கிடக்கின்றன...!

Recommended Video

    சென்னை: மக்கள் பிரச்சனைக்கு 100 நாளில் தீர்வு: வருகிறார் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்!

    தேர்தல் நெருங்கும் சமயங்களில் வழக்கமாக திமுக பல்வேறு கட்ட பிரச்சாரங்களை கையில் எடுக்கும்.. அந்த பிரச்சாரங்கள் அதிமுகவுக்கு டஃப் தரும் வகையிலேயே ஒவ்வொரு முறையும் அமையும்.
    கிராம சபை, பிரமாண்டமான மாநாடு, தடாலடி அறிவிப்புகள், வியக்க வைக்கும் தேர்தல் அறிக்கைகள் என ஒவ்வொரு தேர்தலின்போதும் இவைகளை கையாண்டு வரும்.. இந்த முறையும் இவை எல்லாவற்றையும் பிரச்சாரங்களில் திமுக நடைமுறைப்படுத்தி வருகிறது.

     புகார் பெட்டி

    புகார் பெட்டி

    ஆனால், இந்த முறை ஒரே ஒரு வித்தியாசம்.. பிகே உள்ளே என்ட்ரி ஆகி இருப்பதால், திமுகவின் பிரச்சாரங்கள் நூதனமாகவும், எளிமையானதாகவும், வித்தியாசமாகவும் அமைந்துள்ளன.ஜூம் மீட்டிங் முதல் அதிமுக புறக்கணிப்போம், விடியலே வா, போன்றவை அனைத்துமே சக்சஸ் ஆகிவிட்டன.. இதைதவிர, புகார் பெட்டிகளை ஒவ்வொரு தொகுதியிலும் அறிமுகப்படுத்த போவதாக ஒரு பிளான் இருக்கிறது.

     ஒருநாள் ஒரு தொகுதி

    ஒருநாள் ஒரு தொகுதி

    இந்நிலையில், இன்னொரு சமாச்சாரத்தையும் திமுக தலைவர் பிரச்சாரத்தில் செயல்படுத்த போகிறார்.. அதன்படி, வரும் 29-ம் தேதி திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலின், 30 நாட்கள் வரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்... அதாவது 4 நாட்களுக்கு ஒரு முறை சென்னை திரும்புவது போன்று அவரது பயணத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நாள் என தேதி ஒதுக்கி கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

    பிளான்

    பிளான்

    யாருக்கெல்லாம் என்னென்ன பிரச்சனைகள் உள்ளதோ அவ்வளவையும் நேரடியாகவே கேட்க போகிறாராம்.. கிட்டத்தட்ட நமக்கு நாமே பயணம் போலவேதான் இது என்றாலும், மொத்த தரப்பினரையும் சந்திக்கும் பிளான் இதில் உள்ளது.. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பதுதான் இதன் பெயர்.. அதனால், தொகுதி முழுமையிலும் உள்ள குறைகளை ஸ்டாலின் கேட்க இருக்கிறார்.

    தொகுதிகள்

    தொகுதிகள்

    ஏற்கனவே கிராம மக்கள் சபை கூட்டத்தை ஓபிஎஸ்-ன் தேனி தொகுதியிலும், முதல்வரின் எடப்பாடியார் தொகுதியிலும் தில்லாக நடத்தி தெறிக்க விட்டார் ஸ்டாலின்.. அந்த 2 தொகுதிகளே இப்படி என்றால், ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் குறைகளை கேட்க போவது அதிமுகவுக்கு கலக்கத்தை தந்துள்ளதாம்.. அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மா.செ.க்களுக்கும் ஒருவித டென்ஷன் எகிறி வருகிறது.. திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அடுக்கி கொண்டே போனால், அக்கட்சிக்கு டேமேஜ் ஏற்படும் என்று கணக்கு போட்டவர்களும் ஆடிப்போய் உள்ளார்களாம்.

    வியப்பு

    வியப்பு

    இந்த ஐடியாவும் பிரசாந்த் கிஷோர் டீம் தந்ததுபோல தான் தெரிகிறது.. ஒரு நாளுக்கு ஒரு தொகுதி என்று இதுவரை எந்த தலைவர்களும் பிளான் செய்தது இல்லை.. ஸ்டாலின்தான் இதை முதன்முதலாக முன்னெடுக்க போகிறார்.. அதுமட்டுமல்ல, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்பது, முழுக்க முழுக்க மக்களுடன் நேரடியாக ஒரு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் உள்ளது.. எந்த அளவுக்கு ஒரு கட்சி தலைவர்கள் மக்களுடன் ஒன்றாக கலக்க முற்படுகிறார்களோ, அப்போதே அவர்கள் மக்கள் மனங்களையும் வெல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்..!

    English summary
    MK Stalins another Super Strategy in election campaign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X